Pages

    TNTET : உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்குள் கெடு ; வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிடுமா? - அதிர்ச்சி தகவல்;

    விரைவில் ஆதாரத்துடன் ...

    2016-2017- தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-சார்பு


     

    தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்...


     

    தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள்அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில்பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


     


    கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்


    தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்று வேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

    2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்தது  அதற்கக்குள் நான் போக விரும்பவில்லை. தற்போது தமிழ்நாட்டில் அந்தப் பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல் பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

    கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும் 39000பேர்கள் இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -
    தங்கம் தென்னரசு.

    திரு.கார்த்திக் சண்முகம்
    மாநில துணைத்தலைவர் ,
    9789140822
    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்.

    G.O.No.231 Dt: August 09, 2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for theperiod 01.07.2016 to 30.09.2016 – Orders – Issued.



    சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.

    * தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

    * இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்
    * நடப்பு கல்வியாண்டில் 132353 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளடிக்கிய கல்வி ம்றறும் உதவி உபகரணங்கள் 32.18 கோடி வாங்கப்படும்

     * கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக கணினி மற்றும் சார்ந்த உபகரணங்கள் 4 கோடி செலவில் வாங்கப்படும்

    * தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினால் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட சுமார் 1000 நூல்கள் தமிழ்இணைய கல்வி கழகத்துடன் இணைந்து 5 கோடி செலவில் மின்மியமாக்கி இணையதளத்தில் பணிவேற்றபடும்

    * மாணவர்கள் பாடங்களை பொருள் உணர்ந்து படிப்பதற்கு வசதியாக மல்டிமீடியா அனுபவத்தை தரகூடிய வகையில் பாடநூல்கள் 9 லட்சம் செலவில் மாற்றியமைக்கபடும்

    * தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் சேவையினை மேம்படுத்தவாசகர்கள் பயன்பாட்டிற்காக 93 பகுதி நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக 2.32கோடி செலவில் மேம்படுத்த படும்

    * மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மேம்பட மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் புத்தகங்களுடன் மொழி திறனை வளர்க்க இலக்கண பயிற்ச்சிதாள்கள் வழங்கப்படும்

    * தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மைய நூலகங்களில் சூரிய ஒளியை பயண்படுத்தி மின்சாரம் வழங்கிட 64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

    இவை உட்பட மொத்தம் 22 அறிவிப்புகள

    TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

    ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை  அமைச்சர் பெஞ்சமின்  கூறியதாவது:

    ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.இதற்காக அரசு சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

    TET- TNPSC - PGTRB STUDY MATERIALS SRI RAM COACHING CENTRE

    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
    தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்)

    வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

    பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

    அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

    புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

    கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

    மொத்தம் 7 புக்ஸ்...

    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி  மாவட்டம்
    CELL : 86789 13626

    டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

    TRB - 1048 பணியிடங்கள்

    தமிழ், 
    ஆங்கிலம், 
    வரலாறு, 
    பொருளாதாரம் - 2 புக்

    கல்வி உளவியல் - 1புக்

    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி  மாவட்டம்
    CELL : 86789 13626

    BRTE:ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெளிவுரை.

     

    39 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு அரசுப் பணி

    அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற பி.எட். கல்லூரிகளில், ஆசிரியப் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு,  அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்ற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் 39019  பேர், 'எங்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடங்கள் இருந்தும் வேலை வழங்கக் கூடாது' என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா என்று வேதனைக் குரல் எழுப்பியுள்ளனர்.

    கடந்த 30.07.2016 அன்று,  'கமிஷன்' பிரச்னையால் முடங்கியதா கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்?' என்ற தலைப்பில் விகடன்.காம் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்  முடங்கியதால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள், அரசுப்பள்ளி மாணவர்களது நிலை குறித்தும்,  கல்வித்துறை அதிகாரிகளின் போக்கு குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியைப் படித்த கணினி அறிவியல் ஆசிரியர்கள்,  நம்மிடம், அவர்களின் இன்றைய நிலை குறித்தும் அரசின் பாராமுகம் குறித்தும் மிக விரிவாகப் பகிர்ந்து கொண்டனர்.            

    அப்போது ," கணினி ஆசிரியர்களாகப் பள்ளிகளில் பணியாற்றுவதன் மூலம், அரசுப்பள்ளி மாணவர்களும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கணினிகளைக் கையாளவும் தொழில் நுட்ப வளர்ச்சிப் பெறவும் உதவிட முடியும் என்ற எங்களின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர்களின் எதிர்காலம் இருண்டுகிடக்கிறது" என்றும் மனம் வெதும்ப தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் வே.குமரேசன்,

    "கடந்த இரண்டு மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன.இதில், ஆளும் அதிமுகவும் அடக்கம். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வழக்கம் போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39019 பேர் இப்போது பி.எட். படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது. மொத்தமாக 39 ஆயிரம் பேரும் வாழ்வாதராத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக  முதலமைச்சர் தனிப்பிரிவில் 47 முறை மனு அளித்துள்ளோம். ஆனால் பலன் இல்லை. பள்ளிக்கல்வித்துறையிலும் மனு அளித்துள்ளோம். இது அரசின் கொள்கை முடிவு என்று கூறிவிட்டு,  புறக்கணித்துவிடுகிறார்கள். எங்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. துறை அமைச்சர் பெஞ்சமினிடமும் எங்களின் நிலையை விளக்கி மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு அளித்துள்ளோம். பல கட்டமாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளோம். ஆனால் எங்கள் மீதான அரசின் பாராமுகம் தொடருகிறது." என்று வேதனை தெரிவித்தார்.

    தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ். கார்த்திக் கூறுகையில்,

    " சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில்,  கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 5 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது. அதே நேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் இருக்கிறது. அரசு நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. மூலம் ஐ.டி.சி. திட்டமும் அமலில் உள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கணினி பயிற்சித் தரப்படுகிறது. மாணவர்களுக்கு இல்லை. அதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில்தான் அரசுப் பள்ளிகளில்,  கணினி வழிக்கல்வி,  2011ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் அறிமுகமானது. தமிழ்நாடு பாட நூல் கழகமும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களும் அச்சிட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

    ஏழைக் கிராப்புற மாணவர்கள் கணினி அறிவுப் பயிற்சி பெறுவதை தமிழக அரசு  விரும்பவில்லையா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள்,  முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கல்வியை வழங்கிவருகின்றன. இது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மேலும் புதியதாக 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுமதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அப்டேட் கல்வி இல்லாத நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் இருந்து 11 லட்சம் மாணவர்கள்,  கடந்த 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடைவெளியை தமிழக அரசு எப்போது உணரும் என்று  தெரியவில்லை.

    நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது கல்வி மானிய விவாதத்தின்போது எங்களுக்கு நல்ல செய்தி வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்த்துள்ளோம். ஏனெனில் நாங்கள் போராடி போராடி நொந்துபோயுள்ளோம். இனியும் போராட எங்களிடம் பணபலமும் இல்லை மனோபலமும் இல்லை.அதனால் உடனே இவ்விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு எங்களைக் காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால்  தற்கொலைதான் தீர்வு என்ற முடிவிற்கு நாங்கள் தள்ளப்பட்டுவிடுவோம்" என்றார் கண்ணீர் மல்க. 

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் மனு அளித்து புகார் தெரிவித்தீர்களா  என்று கேட்டபோது, இந்த மாதமும் மனு அளித்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறையில் எங்களின் குறைத் தீர்க்க உரிய நடவடிக்கையும் இல்லை, பதிலும் இல்லை என்று வேதனையோடு பதிலளித்தனர்.

     நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது தங்களது வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடுமா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் கணினி அறிவியல் ஆசிரியர்கள்!

     - தேவராஜன்      
    நன்றி:விகடன்
      
     http://www.vikatan.com/news/coverstory/66858-should-govt-decide-to-stop-39000-computer-science-teacher-posting.art

    1/1/2016 நிலவரப்படியான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் சுழற்சிப் பட்டியல்.

    DSE : HIGHER SECONDARY COIMBINED PANEL LIST RELEASED SERIAL NUMBER FROM 1 TO 625

    CLICK HERE FOR COVERING LETTER...

    CLICK HERE FOR PANEL...

    5 அரசு பாலிடெக்னிக்குகள், 3 அரசு கல்லூரிகள்தொடக்கம்.

    ஆர்.கே. நகர் உள்பட 5 இடங்களில் புதிதாக பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும் (பாலிடெக்னிக்குகள்), 3 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளையும் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னை ஆர்.கே.நகர், தருமபுரி கடத்தூர், திருவாரூர் வலங்கைமான், தஞ்சாவூர் ரகுநாதபுரம், கிருஷ்ணகிரி கெலமங்கலம் ஆகிய 5 இடங்களில் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், தேனி மாவட்டம் வீரபாண்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய 3 இடங்களில் அரசு-கலை அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. இதில், ஆர்.கே.நகரில் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை தாற்காலிகமாக தரமணியில் உள்ள மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இயங்க உள்ளது.

    கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்களும்...:

    இதேபோல், மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கான கட்டடங்கள், திருப்பூர் காங்கேயம், நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய இடங்களில் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் நிர்வாகக் கட்டடங்கள், மதுரையில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணிமனைக் கட்டடம், சென்னையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அணுக்கரு ஆற்றல் காட்சிக் கூடம், புதுமைகாண் காட்சிக் கூடம், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி காட்சிக் கூடம், திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் பரிணாம வளர்ச்சிப் பூங்கா ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

    இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 39 அரசு பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    பணி விடுவிப்பு சான்றிதழ்



    அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?

    அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக,காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.
    அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை. மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும்மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இதனால், காலை உணவும் உண்ண முடியாமல், மாலையிலும் நீண்ட நேரம் பள்ளி யில் இருக்க வேண்டி யுள்ளதால், மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

    இதுகுறித்து, ஆசிரி யர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது:சிறப்பு வகுப்பு நடத்தும் முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளிடம், கல்வி அதிகாரி கள் கருத்து கேட்டிருக்கலாம். மாணவர்கள் மயங்கி விழும் போது, ஆசிரியர்கள், தங்கள் பணத்தில் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், தரமான, 'ஸ்நாக்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். பள்ளி கேன்டீனில் வாங்க, பணமும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த வசதிகள் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, அரசு சிற்றுண்டி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்.

    அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில்,356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. 
    இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். எப்போது கலந்தாய்வு நடக்கும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    கல்லுாரிகளை ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான, 'ஆயுஷ் கவுன்சில்' அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இந்திய மருந்துவம் சார்ந்த, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இதுவரை ஆயுஷ் கவுன்சில் அனுமதி தரவில்லை. இதனால், கலந்தாய்வு தேதி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து,

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, அக்., மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆயுஷ் கவுன்சில் முறையான ஆய்வு நடத்தி வருகிறது; விரைவில், அனுமதி கிடைத்து விடும். குறித்த காலத்திற்கு முன்னரே, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்' என்றார்.