ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
அடிகள் = 4755 வரிகள்
காதைகள் = 30
பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
சமயம் = பௌத்தம்
நூலின் வேறு பெயர்கள்:
மணிமேகலைத் துறவு
முதல் சமயக் காப்பியம்
அறக்காப்பியம்
சீர்திருத்தக்காப்பியம்
குறிக்கோள் காப்பியம்
புரட்சிக்காப்பியம்
சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
கதை களஞ்சியக் காப்பியம்
பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
பசு போற்றும் காப்பியம்
இயற்றமிழ்க் காப்பியம்
துறவுக் காப்பியம்
ஆசிரியர் குறிப்பு:
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
இவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.
நூல் குறிப்பு;
இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
முதல் காதை = விழாவறைக் காதை
இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
கதை மாந்தர்:
மணிமேகலையின் தோழி சுதமதி
புத்தத்துறவி அறவன அடிகள்
மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
மனிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
கோவலனின் குலதெய்வம் மணிமேகலை
பொதுவான குறிப்புகள்:
இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை
இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்
பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
மணிமேகலையை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.
கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணிமேகலை.
திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுறை” என்றும் முதலில் கூறிய காப்பியம்
இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவண பெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.
நூல் அமைப்பு:
13 இலம்பகம்
3145 பாடல்கள்
முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்
நூல் குறிப்பு:
சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.
பொதுவான குறிப்பு:
சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் இது.
கிறித்துவரான ஜி.யு.போப் இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச் சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின் இலியதும் ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.
ஜி.யு.போப் திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்” எனப் புகழ்ந்துள்ளார்.
வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
கம்பர், “சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்து கொண்டேன்” என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.
நச்சினார்கினியர்:
இவர் சைவர்.
சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.
இவரை, “உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்” எனப் போற்றுவர்.
இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
இவர் “தமிழ்மல்லி நாதசூரி” எனப் போற்றப்படுவார்
மேற்கோள்:
இவ்வாறாகப் பிறப்பதுவோ இதுவோ மன்னற்கு இயல் வேந்தே
மெய்வகை தெரிதல் தம்மை விளங்கிய பொருள்கள் தம்மை பொய்வகை இன்றித்தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத்தேயாது ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினையும் கழியும் என்றான்
வளையாபதி
வளையாபதியின் உருவம்:
ஆசிரியர் = தெரியவில்லை
காலம் = கி.பி.9ஆம் நூற்றாண்டு
பாவகை = விருத்தப்பா
பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
சமயம் = சமணம்
பொதுவான குறிப்புகள்:
நூல் முழுவதும் கிடைக்கவில்லை
72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினித்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.
துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.
நூலின் வேறு பெயர்கள்:
குண்டலகேசி விருத்தம்
அகல கவி
பொதுவான குறிப்பு:
சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.
மேற்கோள்:
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூபுன் ஆகி நாளும் நாள் சாகின்றோமால் நமக்கு நாம் அழாதது என்னவோ.
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. 2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு. 3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு