TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்
Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts
Organization Name: Tamilnadu Uniformed Services Recruitment Board (TNUSRB)
Employment Type: Tamilnadu Govt Jobs
Job Location: Tamilnadu
Total No. of Vacancies: 13137
Name of the Post: Constable
Qualification:
Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016
Age Limit:
Go through Constable official Notification 2016 for more reference
Pay Scale: Rs.7500/- Per Month
Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, Final Merit List
How to Apply:
Visit official website www.tnusrb.tn.gov.inClick on career PageClick on Tamilnadu Police (TNUSRB) Constable Recruitment 2016Then Click on “Apply online” Click on “New Registration”Fill Required detailsSubmit the application & Make PaymentsTake a print out of Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 online application form
Important Date:
Starting Date for Submission of Online Application: September 2016Last date for Submission of Online Application: Not MentionedDate of Written Examination: Jan/Feb 2017
Important Link:
Official Notification: Click Here To Download
Official Notification: Click Here To Download
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்றைய வழக்கின் உத்தரவு ; 04.10.2016 ல் மீண்டும் விசாரணை
வழக்கு தாக்கல் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இருவேறு தீர்ப்பு இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டு தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது. ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அக்.4–ல் இறுதி விசாரணை இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யா தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவான இறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மேலும் சில மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம் (அக்டோபர்) 4–ந்தேதி இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு சரி என்றும் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.
TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு பற்றிய நேரடி தகவல்கள்
கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்
* 'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில்*, கணினி ஆசிரியர்களை நியமிக்கா மலும், *கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும்*💥 பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
*💥தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.*
💥பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
பிறகு பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம் பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.*💥 இவர்களுக்கு, *📚தமிழகபள்ளிகளில் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை😍*.
வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், *கணினி அறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்க வில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.
ஆன்லைன் படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த உள்ளது.
*தமிழக அதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும்* அபாயம் உள்ளது. *பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன் இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டு உள்ளன;* அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில துணை அமைப் பாளர் *ஏ.முத்துவடிவேல்* கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல் பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''*😂 என்றார்.
TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.