Pages

    அறிமுகம் - `அம்மா வை-பை?`.

    தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.


                முதலாவதாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள பேருந்து நிலையம், பொழுதுபோக்கு பூங்கா போன்ற இடங்களில் இலவச அம்மா 'வை-பை' வசதி ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த வசதியை முதல்வர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

    இதுபற்றி அரசு அதிகாரி: தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 32 மாவட்டங்களின் தலைநகரங்களில் இலவச 'வைபை' வசதியை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையம், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும். அதே சமயம் ஒருவர் இந்த வைபை வசதியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே டவுன்லோடு செய்ய ஏதுவாக சில கட்டுபாடுகளும் விதிக்கப்படும்.

    இதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. டெண்டர் ஆகஸ்டு 15க்கு முன் இறுதி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்ப்பதாகவும், செப்டம்பர் மாதம் இலவச வைபை உபயோகத்துக்கு வரும் என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் உபயோகத்தை பொறுத்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரைவில் செயல்படுத்த நடடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த திட்டத்துக்கு வழக்கம்போல் "அம்மா வை-பை" என்று பெயர் சூட்டப்படுமா? அல்லது தமிழ்நாடு அரசு பெயரிலே செயல்படுத்தப்படுமா என்பது உபயோகத்துக்கு வரும்போதுதான் தெரிய வரும்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு