Pages

    பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?

    கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன.இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது


    இதனால், பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
    ஆனால், பள்ளிகளில் உள்ள, அமைச்சு பணியாளர்கள் மட்டும், ஒரே பள்ளியிலே பணிப்புரிகின்றனர். சுண்டப்பாளையம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவுபள்ளிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட, அமைச்சு பணியாளர்கள் பணிப்புரிகின்றனர். இவர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர் இடங்களுக்கு, பணி நிரவல் செய்தால், பணிப்பளுவை சமாளிக்க உதவியாக இருக்கும் என, அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில்,’கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் நகர உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்களில், பத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், நலத்திட்ட பொருட்கள் வினியோகித்தல், தேர்வு சமயங்களில், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.எனவே, பள்ளிகளில் கூடுலதாக உள்ள அமைச்சு பணியாளர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்குபணிநிரவல் செய்ய வேண்டும். இதை, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள, அலுவலர்களுக்கான கலந்தாய்வில்நடைமுறைப்படுத்தினால், பணிகள் விரைந்து முடிக்க, உதவியாக இருக்கும்,’என்றனர்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு