Pages

    உயர்படிப்பு எதைப்படிப்பது என குழப்பமாக இருப்பவர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை!

    இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    உயர்படிப்பு எதைப்படிப்பது என குழப்பமாக இருப்பவர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை!
    எதைப் படிப்பது,எந்தக் கல்லூரிக்குச் செல்வது,நன்கொடை கொடுக்க முடியுமா? என நடுத்தர குடும்பங்கள் தவிப்பது இயல்பே!
    அவர்களுக்கு மட்டுமே இப்பதிவு!


    எல்லோருமே அரசு வேலை கிடைத்து விடாதாயென? என்ற எதிர்காலக் கனவுகளைச் சுமந்தே தவிக்கிறோம்!
    இன்றுள்ள அரசு வேலை வாய்ப்பு ஆசிரியர் வேலை மற்றும் அரசு ஊழியர் வேலை மட்டுமே.மாநில அரசு சார்ந்த பணிநியமனங்களில் தமிழ் வழியில் படித்தோருக்கு 20% இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பணிகளில் தேர்வு எழுதிச் செல்ல முடியும்!
    அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் B.A. தமிழ்..தமிழ் இலக்கியம் சேர்ந்து படிக்கலாம்.அல்லது வரலாறு,வணிகவியல்,கணிதவியல்,பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் மேற்கண்ட பாடப் பிரிவுகள் உள்ளதாயென கேட்டு சேரவேண்டும்.ஏனெனில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆங்கில வழியில் அனுமதி வாங்கி வைத்துக் கொண்டு தமிழிலும் தேர்வெழுத வைப்பதுண்டு.இதனால் தமிழ்வழி படித்ததாக உரிமை கோர முடியாது.எனவே கவனம் தேவை!
    தினமும் கல்லூரிக்கு நேரடி சேர்க்கை மூலம் படிக்க வாய்ப்பில்லாதவர்கள்,பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் சேர்ந்து தமிழ்,மற்றும் உங்களுக்கு விருப்பமான எந்தப் பாடமாக இருந்தாலும் அதனை தமிழ் வழியில் விண்ணப்பித்து பட்டம் பெறுங்கள்.இதன் மூலம் TNPSC GROUP I, GROUP II A,GROUP II(interview post),ஆகிய தேர்வுகளில் தமிழ் வழியில் 20% இட ஒதுக்கீடு மூலம் கடினமான பயிற்சிகள் மூலம் எளிதாக போட்டியிட முடியும்.
    மேலும் ஆசிரியர் பணிக்குத் தான்  செல்வேனென அடம் பிடிப்பவர்கள் தமிழ் வழியில் பட்டப்படிப்பை முடித்து பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படிப்பதால் TEACHERS RECRUITMENT BOARD தேர்வுகள் மூலம் வெற்றி பெற உதவும்!
    முதுகலை படித்தும் இதே போல் பணியினைப் பெற உழைக்க வேண்டும்!
    எந்த வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாலும்,இனிமேல் போட்டித் தேர்வுகள் மூலம் மட்டுமே சாத்தியம்! அதற்கான ஒரு நல்ல வழி தமிழ்வழியில் படிப்பது!
    மேலும் தட்டச்சுப் பயிற்சித் தேர்வுகள் முடித்து விட்டால் TNPSC GROUP 4 தேர்வுகள் எளிதில் தேர்ச்சி பெறலாம்.
    6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் மற்றும்பொது அறிவு,அரசியல் அறிவு,பொருளாதாரம் பற்றிய அறிவு,வணிகச் செய்திகள்,அறிவியல் செய்திகள் அறிவது அவசியம்!
    இலட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வழியில் கவனம் செலுத்தலாம்.
    நன்றி!

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு