Pages

    தொலைதொடர்புத் துறையின் சென்னை மண்டலத்தில் உதவியாளர் பணி

    மத்திய அரசின் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: Personnel Assistants
    காலியிடங்கள்: 02
    சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800
    தகுதி: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி இயக்குவதில் திறன் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணி: Junior Accountants
    காலியிடங்கள்: 06
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
    தகுதி: மத்திய, மாநில அரசு துறைகளில் எல்டிசி பிரிவில் 8 ஆண்டுகள் அல்லது யூடிசி பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணி: Stenographer
    காலியிடங்கள்: 03
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
    தகுதி: தட்ச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணினி இயக்குவதில் திறன் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணி: Lower Division Clerks (LDC)
    காலியிடங்கள்: 14
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
    தகுதி: மத்திய, மாநில அரசு துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 16.02.2016 தேதியன்படி 56க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை: www.ccatn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
    Joint Controller of Communication Accounts (Admin),
    O/o Pr.CCA Tamil Nau Circle, Chennai - 28.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccatn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    தாதுப்பொருள் உற்பத்தி கழகத்தில் டிரெய்னி பணி

    மத்திய அரசு நிறுவனமான தாதுபொருள் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: Executive Trainee (Geology)
    காலியிடங்கள்: 08
    தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    பணி: Executive Trainee (Geophysics)
    காலியிடங்கள்: 03
    தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    பணி: Executive Trainee (Mechanical Engineering)
    காலியிடங்கள்: 10
    தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
    பணி: Executive Trainee (Petroleum Engineering)
    காலியிடங்கள்: 08
    தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: GATE-2016 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இதற்கான செல்லான் படிவத்தை பூர்த்தி செய்து பஞ்சாப் நேஷல் வங்கி, பாரத் ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
    விண்ணப்பிக்கும் முறை: www.mecl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mecl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    எல்ஐசி வீட்டுவசதி நிதிக்கழகத்தில் பணி

    ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள IT Professional பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: IT Professional
    காலியிடங்கள்: 04
    வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 25 - 35க்குள் இருக்க வேண்டும்.
    தகுதி: கணினி அறிவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lichousing.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    327 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 327 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: சத்துணவு அமைப்பாளர்
    காலியிடங்கள்: 327
    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடி பிரிவினர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை: www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சத்துணவுப் பிரிவு) அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களுக்கு சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2016

    சென்னை ஐ.ஐ.டி.யில் பல்வேறு பணி

    இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் சென்னையில் மையத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத 70 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
    1.  Superintending Engineer - 01
    2.  Deputy Registrar - 02
    3.  Assistant Registrar -  02
    4.  Medical Officer - 03
    5.  Technical Officer - 02
    6.  Physical Education Officer - 01
    7.  Junior Superintendent: - 04
    8.  Junior Engineer - 01
    9.  Junior Technical Superintendent - 09
    10. Junior Technician - 17
    11. Junior Assistant - 16
    12. Security Guard - 12
    விண்ணப்பிக்கும் முறை: http://www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
    மேலும் கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

    நீர்வழி மற்றும் ஆகாய வழிகள் மூலம் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வரும் கடலோரக் காவல் படையின் (இந்தியன் கோஸ்ட் கார்டு) யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
    கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், டெலி கம்யூனிகேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    உடல் தகுதி: உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் குறைந்த பட்சம் 5 செ.மீட்டர் மார்பளவும், உயரத்திற்கு நிகரான எடையும் கொண்டிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும், கேட்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப்பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை நடைபெறும். நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
    விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி - காலியிடங்கள் விவரம்:
    பணி: சிவிலியன் மெடிக்கல் அதிகாரி - 49
    பணி: பேராசியிர் (சைக்கியாட்ரி)  - 26
    பணி: பேராசிரியர் (என்டோக்ரைனாலஜி) - 09
    பணி: பேராசிரியர் (கேஸ்ட்ரோ- என்ட்ராலஜி) - 08
    பணி: உதவி பேராசிரியர் (பிளாஸ்டிக் சர்ஜரி) - 08  இதர பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 112 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    வயது வரம்பு: அதிகபட்சமாக 30 - 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து வயதுவரம்பு மாறுபட்டுள்ளது. அதிக விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.
    தகுதி: MCA, UGC, AICTE விதிமுறைப்படி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    பத்தாம் வகுப்பு தனி தேர்வர் அனுமதி சீட்டு பிப்ரவரி -8 முதல் பதிவிறக்கம் செய்யலாம்...


    ஷிப்ட் முறையில் பள்ளிக்கு சென்றால் வேறு மாவட்டத்துக்கு மாற்றம்.... ஆசிரியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை...


    ஆட்கள் தேவை...


    கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்...


    டி . என். பி. எஸ் . சி உறுப்பினர் நியமனம் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்...


    அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு ...


    அண்ணாமலை பல்கலை கழகத்தில் 369 பேராசிரியர்கள் கூண்டோடு மாற்றம்...


    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் வாகன ஓட்டுனர் மற்றும் வாகன சீராளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு..


    ஆசிரியர் தாக்கியதில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி மாணவன்: நடவடிக்கை கோரி போராட்டம்

    சென்னை சந்தோமில்  சி.எஸ்.ஐ காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளி இயங்கி  வருகிறது.இந்த பள்ளியில்  கடந்த 2015ம் ஆண்டு +2 படித்து வந்த ராகவராஜ் என்ற மாணவரை அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஷீலா ஜான்சி மற்றும் அவரது கணவர் மகேஷ் தேவன் ஆகிய இருவரும் அந்த மாணவர் மீது தாக்குதல் நடத்தியதால்  அம்மாணவர் சுய நினைவு இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் 25.01.16 அன்று உயிர் இழந்து விட்டார் .
    சாந்தோம் சி.எஸ்.ஐ பள்ளி நிர்வாகமும் ,காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுக்காததை  கண்டித்தும் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாணவர்களுடன் இறந்த மாணவனின் பெற்றோர்,தமிழ்நாடு காது கேளதோர் கூட்டமைப்பினர் நேற்று (3-2-16) போராட்டம் நடத்தினார்கள்.மாணவனின் உயிர்இழப்பிற்கு காரணமாக  ஆசிரியர் மீதும் அவரது கணவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மாணவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்குமாறு தமிழக முதல்வருக்கும்,சென்னை மாநகர காவல் துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மூன்று வகுப்பறையுடன் இயங்கும் அரசு உயர் நிலைப்பள்ளி..



    சமையலர் , துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு...


    ஆசிரியர் போராட்டம் மாணவர்களுக்கு அடி...



    பி.எட்., எம்.எட்., 2 ஆண்டு படிப்பு வசதியை நிறைவேற்ற உத்தரவு...