Pages

    ஆசிரியர் தகுதித்தேர்வு போராட்டங்கள் முற்றிலும் அரசியலே உள்நோக்கமும் தவறான வழிகாட்டலுமே ஆதாரங்களுடன்

    ஆசிரியர் நண்பர்களே கடந்த ஆண்டு நாம் நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் எதிரான போராட்டங்களை திறமையாக நடத்தினோம் மேலும் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளன...


    இந்நேரத்தில் ஒருசிலர் செய்யும் மடமைகளால் நாம் மறைமுகமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்...

    குறிப்பக திருமதி ஜெயகவிதாபாரதி குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சார்ந்தவர் மேலும் ஆசிரியர்களை தவறான வழிகளிலும் தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவே எங்களை ( ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆடிரியர் உரிமைக்கழகம் ) பதிவு பெற்ற அமைப்பை கலந்து ஆலோசிக்கமல் குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு துதிபாடி தன்னுடைய அரசியல்நாடகம் ஆடுகிறார்...

    நீங்களும் பாவம் வேலைவேண்டும் என்ற எண்ணத்தின் அவரின் சுயரூபம் தெரியாமல் கலந்துக்ண்டீர்கள்...

    மேலும் நம்முடைய வழக்கு வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கும் அரசிடம் கெஞ்சுவது நம்மிடம் உள்ள ஒற்றுமையையும், வழக்கு தோற்றுவிடுமோ என்ற அச்சத்தை காட்டுகிறது ...

    தமிழகத்தின் முக்கிய மீடியாக்கள் இவர்களின் அரசியல் சூழ்ச்சியினை அறிந்து செய்தி வெளியிடவில்லை..மேலும் தினமலர் நாளிதழ் இவர்களின் அரசியல் சூழ்ச்சியினை அறிந்து கேவலமாக ஆசிரியர்கள் ஜால்ராவால் உஷார் என செய்தி வெளியிட்டுள்ளது...

    அதன் ஆதரங்களையும் இவர்களின் போராட்ட புகைப்படத்தையும் பாருங்கள்... மேலும் தெரிவிப்பது என்னவெனில் வழக்கு முடியும் நிலையில் உள்ளதால் இந்த அரசிடம் கெஞ்சாமல் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் நீதி கிடைக்கும் அதுவரை பொறுமைகாக்கவும் பின் அனைவரையும் கலந்து மிகப்பெறிய அளவில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கலாம்.... ஜெயபாரதிகவிதாவின் அதற்கு அரசியல் சூழ்சியால் ஆசிரியர்களாகிய நம்மை மற்ற தமிழக அரசியல் இயக்கங்களும் மீடியாக்களும் கல்வியாளர்களும் நம்மை தவறாக சித்தரிக்க கூடும்.... 

    நன்கு யோசித்து முடிவு எடுங்கள் ஆரம்பத்திலிருந்து இப்பிரச்சனைக்கு போராடியது யார்...இப்போது இதை அரசியலாக்குவது யார் என யோசியுங்கள்...
    NOTE: All woman - Green colour  Uniform ( A.D.M.K)





    7 comments:

    1. நடப்பவை அனைத்தும் நன்மைக்கே..,

      ReplyDelete
    2. அரசியல்வாதிகள் போல இப்படி போட்டாபோட்டி, அறிக்கை போர் செய்வது எல்லாம் எதற்காக நண்பரே?
      பாதிக்கப்பட்ட அனைவருக்கும் திரு.ராஜலிங்கம் உங்கள் போராட்டம், அர்ப்பணிப்பு எல்லாம் தெரியும்.
      மாற்றுக் கருத்தும், மாற்று வழியும் சரியென்போர் அவரவர் வழிகளில் முயற்சிப்பதை ஏளனம் செய்வது தரம் தாழ்ந்த செயலென படுகிறது.
      பாதைகள் வேறாயினும் நோக்கம் ஒன்று மட்டுமே.
      முடிந்தால் மாற்றுப் பாதையை ஏற்க, இல்லையெனில் விலகி பார்வையிடுக.
      ஏனென்றால் ஒரு ஊருக்கு, ஒரு வழி மட்டும் அல்ல.
      நீதி மன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எத்தனையோ கோரிக்கைகள் அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது (இடைநிலை ஆசிரியர் ஊதியம், சாலைப்பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என பட்டியல் மிக நீளம்).
      ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால்? இந்த கோரிக்கையின் நிலை என்ன ஆகும் என்றும் சிந்திக்கவேண்டும் அல்லவா?
      கோரிக்கையினை வென்றெடுப்பது மட்டுமே நோக்கமாக கொண்ட நீங்கள் மாற்று வழியில் முயற்சிப்போரை இழிவுபடுத்தி,போராட வருபவர்களை கலைத்து, ஒற்றுமையை குலைக்காதீர்கள் நண்பரே.

      ReplyDelete
      Replies
      1. OK mam....avarkalum engalai izhivu paduththuvathai thavirka sollungal....

        Delete
      2. நிச்சயமாக இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் அதை உணர்வார்கள் எனற நம்பிக்கை மேன்மையான ஆசிரியர் சமூகத்திற்கு உண்டு என , நான் திடமாக நம்புகிறேன்.
        புரிந்துகொண்டமைக்கு நன்றி.

        Delete
      3. This comment has been removed by the author.

        Delete
    3. This comment has been removed by the author.

      ReplyDelete

    4. 1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

      2. உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

      3. கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

      4. உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

      5. மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

      6. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

      7. திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.

      8. தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு