Pages

    விரைவில் 8000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப

    புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.



    தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

    சென்னை:தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
    தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளனர். எனவே புதிதாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேவையில்லை.மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    1 comment:

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு