Pages

    இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?*

    இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?


    அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் இதுவரை  27 இலட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கி உள்ளது தமிழக அரசு. ஆனால்  இதன் பயன் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா.

    உயர்கல்வியில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும் கணினி அறிவியல் பாடம் ஓர் அங்கமாக இருக்கும் போது ..

    இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர். இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாகும்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, ஓரளவு தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளனர்.
    அடிப்படை கணினி கல்வி கூட அரசுப்பள்ளிகள் இல்லை என்பது வேதனை...

    கல்வியில் மற்றம் வேண்டின் கலைத்திட்டம் மற்றம் பெற வேண்டும்..
    கல்வி பொதுவுடமை என்றால்
    தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் கணினி அறிவியல் பாடம் எதற்கு..?

    அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மேல்நிலைப்பள்ளியில் குறிப்பிட்ட பாடப்பிரிவுவை தேர்வு செய்து படித்தால் மட்டும் தான் இல்லையெனில்
    அடிப்படை கணினி கல்வி  அறிவு கிடைக்கப்பெறுவதில்லை என்பதே இன்றய நிலை..

    அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் மடிக்கணினி மட்டும் வழங்கி என்ன பயன்..
    தமிழக அரசு 27 இலட்சம் மாணவர்களுக்கும் இதுவரை மடிக்கணினி வழங்கியது இருவருக்காது இதன் பயன் பற்றி கற்றுக் கொடுக்கவில்லை ஏன்..?

    அரசுப்பள்ளிகள் சமச்சீர் கல்வியல்  கணினி அறிவியல் பாடபுத்தகம்
    2011ஆம்  ஆண்டு அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங் கப்படவில்லை.இன்று இதன்
    நிலையை யார் அறிவார்..(குப்பையில் உறங்கும் 6-10 கணினி அறிவியல் பாடபுத்தகம்)தமிழ்நாடுபாடநூல் கழகம் RTIயில் தந்த அதிர்ச்சியான தகவல்.

    ஏழையின் கல்வியில்  மட்டும்  பாகுபாடு  ஏன்..?

    இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர் களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக் கின்ற மாணவர்களுக்கு கிடைத் துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.
    எனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளி லும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளியில் ஆரம்ப பள்ளியிலே கணினி பாடம் கற்றுத்தர்படுகிறது நாம் அண்ட மாநிலம் கணினி கல்வியில் சிறந்து விளங்குகின்றன.கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியல்.பாண்டிச்சேரியில் அரசுப்பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்..
    தமிழகத்தில் மட்டும் இலவச மடிக்கணினி வழங்கும் தமிழக அரசு.

    கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள தமிழக அரசாங்கம், அரசுப்பள்ளிகள் அனைத்திலும்
    புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப்படமாக
    கொண்டுவர மாண்புமிகு கல்வி அமைச்சர் மதிப்புமிகு செயலாளர் தமிழகத்தில் கணினி கல்வியை ஆறாம் வகுப்பிலிருநதே ஆறாவது பாமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டம்.

    எதிர்கால மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு...

    பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

    திரு வெ.குமரேசன் ,
    மாநிலப் பொதுச்செயலாளர்,
    9626545446,
    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள் சங்கம்.655/2014.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு