Pages

    TNTET: 2013 டிஇடி வெயிட்டேஜ் பாதித்தவர்கள் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சியா??

    போராட்ட நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு:தற்போது வரை அதிகப்படியான நண்பர்கள் நம் போராட்டத்தில் அவசியம் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.அவர்களுக்கு நன்றி!


    மேலும் உறுதியாக கட்டாயமாக கலந்து கொள்வோம் என திட்டமிட்டுள்ள நண்பர்கள் தங்கள் பெயர்,மாவட்டம், போன்ற தகவலை உடனே அனுப்பும் படி தொடர்ச்சியாக வேண்டி வருகிறோம்.அடுத்த போராட்டத்தை எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரியான போராட்டமாக நாம் செய்து காட்ட வேண்டும்...நண்பர்கள் வெயிட்டேஜ் முறைக்கு ஆதரவாகவோ?எதிராகவோ பதிவிட்டால் மட்டுமே நீக்கப்படுகின்றனர்.

    தற்போது வரை குழுவில் உள்ள மற்ற நண்பர்களை ஒருங்கிணைப்பு குழு எந்த காலத்திலும் நீக்காது.அனைவரும் அடுத்த போராட்ட களத்தில் எவ்வாறு செயல்படுவது?எப்படி செயல்படுவது? என்பது பற்றி விவாதித்தால் மற்ற நண்பர்களுக்கும் அது உத்வேகத்தை அளிக்கும்.புதுமையான முறையில் நாம் நூதன முறையில்  போராட திட்டமிடப்பட்டுள்ளது.ஆண் ஆசிரியர்கள் வெள்ளை நிற சட்டை அணிந்து வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் அவசியம் சாக்பீஸ் துண்டுகளை எடுத்து வரவும்.திருச்சி முதன்மை கல்வி அலுவலக வாசலில் அனைவரும் ஒரு நிமிடத்தில் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யவும் மீடியாவை நம் பக்கம் ஈர்க்கவும் இந்த முறையை கையாள திட்டமிடப்பட்டுள்ளது.ஆங்கில ஆசிரியராக இருந்தால் ஆங்கிலத்தில் ஒரு பழமொழியும்,தமிழ் ஆசிரியராக இருந்தால் ஒரு திருக்குறளையோ,கணித ஆசிரியராக இருந்தால் ஒரு சூத்திரத்தையோ,அறிவியல் ஆசிரியராக இருந்தால் ஒரு விதியையோ,சமூக அறிவியல் ஆசிரியராக இருந்தால் ஒரு அரசரின் பெயரையோ தரையில் எழுதி நம்முடைய எதிர்பை வெளிகாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் மீடியாவிடம் நாம் கூறப்போவது அரசுப் பள்ளியிலும் தனியார் பள்ளியிலும் கரும்பலகையில் எழுதக்கூட முடியாத கற்பிக்க தகுதி இருந்தும் புறக்கணிக்கப்படுகிறோம் ஆகவே எங்களுக்கு வீதியில் பாடம் நடத்தும் அவல நிலைக்கு இந்த அரசால் எங்கள் நான்காண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் என கூறி ஆசிரயர் என்பது எங்களுக்கு கனவாகவே போய்விடும் போல் உள்ளதாக ஆக்ரோசமாக எடுத்து கூறுவோம்...நம் தலையாய கோரிக்கையான 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை இழந்த நான்கு ஆண்டுகளுக்கான சலுகை மதிப்பெண்ணை பெற்றால் மட்டுமே 2017 தேர்வர்களை துறத்தி விரட்டி அடிக்க முடியும் என்பதை மட்டும் மனதில் வைத்து உறுதியாக கட்டாயமாக போராட தயாராவோம் நண்பர்களே...இதுவே எங்கள் ஒருங்கிணைப்பு குழுவின் கடைசி போராட்டம் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்...வாழ்வா ?சாவா?என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்....போராட தைரியம் இல்லாத கோளைகள் இப்போதே ஓடி ஒழிந்து கொள்ளுங்கள்....போராட துடிக்கும் நாளைய ஆசிரிய நண்பர்களே....நமக்கான நாள் 8/8/2017 மறந்து விடாதீர்கள்...நமக்கான தீர்ப்பு விரைவில் மாற்றி எழுதப்படும் இது மட்டும் உறுதி!!!! கட்டாயம் அனைத்து ஆசிரியர் நண்பர்களும் உறுதியாக கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுமாய் உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்-2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு