Pages

    கனமழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பள்ளி வேலை நாட்களை 200 நாட்களாக குறைக்க - SSTA கோரிக்கை


            Monday, 11 January 2016 - 2016- புத்தாண்டை முதல் வெற்றியுடன் ஆரம்பித்தது !!! ( தமிழகம் முழுவதும் தகுதி காண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் Probationary ஆணை) இன்று(11.01.2016)  SSTA வின் மாநில பொறுப்பாளர்கள்  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை SSTA சார்பாக  தெரிவித்தனர்....

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது.

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது.

    கூட்டத்தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார்.

    12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு -சேலம் சி.இ.ஒ ஞானகவுரி

    சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில், போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த 

    TNTET: 4 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு


    நிபந்தனையின் அடிப்படையில் நிரந்தர பணியிடத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    ஆசிரியர் தகுதித்தேர்வு போராட்டங்கள் முற்றிலும் அரசியலே உள்நோக்கமும் தவறான வழிகாட்டலுமே ஆதாரங்களுடன்

    ஆசிரியர் நண்பர்களே கடந்த ஆண்டு நாம் நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் எதிரான போராட்டங்களை திறமையாக நடத்தினோம் மேலும் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளன...

    TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் சென்னை கூடுகை- DPI ல் மனு

    ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPIபள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர்.

    தமிழக அரசு சார்பில் கோவையில் வேலைவாய்ப்பு முகாம்:

    தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. அனுமதி இலவசம்.
    மொத்தம் தேர்வு செய்யப்பட உள்ள

    தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் தகவல்

    தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.

    TNPSC GR-2A MODEL EXAM - 1

    Click here foclick here r tnpsc group 2A model exam



    Share more friends any one use...

    அமைச்சர்களே துதிபாடுவதில் (ஜால்ரா) போடுவதில் ஆசிரியர்கள் உங்களையும் மிஞ்சி விடப்போகிறார்கள் உஷார். - Dinamalar


    சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து

    சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். 

    ஆசிரியர்கள் தவிப்பு!

    தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.இதனால், மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகள்: ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகளைப் பெறுவது தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    TRB அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.


    ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ்இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..


    நான் மற்றும் செல்லத்துரை, கபிலன் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....

    TET : தகுதிகாண் மதிப்பெண்முறை காரணமாக 75000 பேர் வேலை இல்லாமல் தவிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்ட

    சென்னை, டிச. 23–பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும்.இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர்.

    2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித்தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவித்தார்.தகுதித் தேர்வில் வெற்றி பெற 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55 சதவீதமாக குறைத்த தமிழக அரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது.அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதம் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15 சவீதம், 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10 சதவீதம் சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது.தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது.15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80 சதவீத மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100 சதவீத மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது.இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது.

    அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10–15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் தகுதிகாண் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர்.இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது.இதற்கெல்லாம் மேலாக தகுதிகாண் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை.தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.