Pages

    கால்நடை மருத்துவ பல்கலைகழகம் வரும் கல்வியாண்டில் 7 புதிய பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்கிறது...



    TNPSC Current Affairs - 2015 January To May

    TNPSC - VAO GK pdf Download

    ஆசிரியர் நியமன விவகாரம்: பள்ளிக் கல்வித்துறை மேல்முறையீடு; உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஊதியம் வழங்க உத்தரவு:



    தூத்துக்குடி மேலத்தட்டப்பாறையைச் சேர்ந்த எஸ்.எஸ்தர் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2012-இல் பணியில் சேர்ந்தேன்.

    வூசூ தற்காப்பு போட்டியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை...



    மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 10 அரசு பள்ளிகளுக்கு பரிசு...


    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்...



    மாவட்ட கல்வி அலுவலரிடம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மனு...


    தனியார் வேலைவாய்ப்பு முகாம்...


    பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வருகிற 12ம் தேதி தொடக்கம்..


    பிளஸ் 2 தேர்வுக்கு முதன்மை விடைத்தாள்கள் பள்ளிகளுக்கு விநியோகம்...




    அரசு துறைகளில் 18953 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 18953 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    29 தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

    வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் இடத்திலேயே வேலை வழங்க தமிழக அரசு ஏற்பாடு

    மழை வெள்ளத்தால் நீர்நிலை ஓரங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
    சென்னையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்கள் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். இவர்களுக்கு சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
    இத்திட்டப்பகுதிகளில் கழிவுநீரகற்று அமைப்புகள், சாலைகள், மழைநீர் வடிகால், குப்பைத் தொட்டிகள், தெருமின் விளக்குகள் கான்கீரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலை கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    இதுவரை 3,590 பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் திட்டப்பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்த முதல்வர் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிடட்டார்.
    இதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக நாளை (பிப்ரவரி 6) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் உள்ள 150 தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது.
     இந்த முகாமில் இரவு காவலர், ஓட்டுநர், சமையலர், கம்பியர் உள்ளிட்ட 8000-க்கும் மேலான பணிகளுக்கு, பணிநியமன ஆணைகளை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது. 
    வேலையளிப்போர் எதிர்பார்க்கும் சிறப்பு திறன்களை அறிந்து அதற்கான பயிற்சிகளை அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 25க்கும் மேற்பட்ட தொழிற்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வளர்ச்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுள் 4,200 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூபாய் 4 கோடி செலவில் திறன் பயிற்சிகள் வழங்க பயிற்சியாளர்கள் தேர்வு செய்யவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    அயல்நாட்டில் வேலைவாய்ப்பினை பெற விழைவோர், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவும் பதிவுகளைப் புதுப்பித்து கொள்ளவும் கூடுதல் பதிவுகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    மேலும், சுய தொழில் தொடங்க ஆலோசனைகளும் போட்டித்தேர்வுகள் குறித்த ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மறுகுடியமர்வு திட்டப்பகுதிகளிலிருந்து துரைப்பாக்கத்திற்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  தற்போது மறுகுடியமர்வு செய்யப்பட்ட 3,590 குடும்பங்களுடன் ஏற்கெனவே ஒக்கியம்-துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் அதனருகில் வசித்து வரும், குடிபெயர்ந்த 29,410 குடும்பங்களும் ஆக மொத்தம் 33,000 குடும்பங்களும் இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உள்ளது.
    ஆகவே, ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மறுகுடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மத்திய அரசின் உணவக பணியிடங்கள்: நேர்முக தேர்வு ரத்து

    நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவகங்களில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். மேலும் தேவைப்பட்டால் பணித்திறன் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவித்தார்.
    இதன்படி மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 1,352 இடங்களில் இயங்கும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் காலியாகும் இடங்களுக்கான ஆள்கள் தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது. என மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால், பணித்திறன் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையில் அலுவலக உதவியாளர் பணி



    தமிழ்நாடு மின் ஆய்வுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    விளம்பர எண். 001/E3/2016  தேதி: 27.01.2016
    மொத்த காலியிடங்கள்: 07
    பணி: அலுவலக உதவியாளர்
    தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி இடம் மற்றும் காலியிடங்கள்:
    1. Chennai (HO) - 03
    2. Coimbatore - 01
    3. Erode - 01
    4. Palldam - 01
    5. Virudhunagar - 01
    வயதுவரம்பு: பிசி, எம்பி, டிஎன்சி, பிசிஎம் - 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.02.2016


    விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை மின் ஆய்வுத்துறை இணையதளமான www.tnei.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

    குடியரசு தலைவர் மாளிகையில் 66 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


    இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    விளம்பர எண்: A-3301/6/08-Estt.
    பணி: Mail (New Delhi)
    காலியிடங்கள்: 58
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
    பணி: Mail (Bolarum (Hyderabad)
    காலியிடங்கள்: 04
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
    பணி: Mail Mashobra (Shimla)
    காலியிடங்கள்: 04
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    வயதுவரம்பு: 29.02.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2016
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
    The Deputy Secretary (ESTT),
    President's Secretarait,
    Rashrrapati Bhavan, New Delhi - 110 004.
    மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://rashtrapatisachivalaya.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணி

    இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 7 Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    விளம்பர எண். ICAR-CTRI-LDC-2-01/2016
    பணி: Lower Division Clerk (LDC)
    காலியிடங்கள்: 07
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், கணினியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை "“ICAR Unit - CTRI, ராஜமுந்திரி" எஸ்பிஐ, ஏபிபி மில்ஸ் கிளை, ராஜமுந்திரியில் (கிளை குறியீடு 1980) மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
    The Senior Administrative Officer,
    ICAR-Central Tobacco Research Institute (CTRI),
    Dr. N.C. Gopalachari Road, Bhaskar Nagar, Rajahmundry-533 105 Andhra Pradesh .
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் பணி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    தமிழ்நாடு மருத்துவ  சார்நிலைப்  பணியில்  காலிப்  பணியிடங்களை  நிரப்பிட  தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பு தமிழ்நாடு  மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு, மருத்துவப்  பணியாளர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 
    இப்பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்புகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    செய்தி  வெளியீடு எண்: 074
    தேதி: 03.02.2016
    பதவியின் பெயர்: EEG / EMG Technicianகாலியிடங்கள்: 12
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
    பதவியின் பெயர்: Audio Metricianகாலியிடங்கள்: 17
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
    பதவியின் பெயர்: Prosthetic Craftsmanகாலியிடங்கள்: 64
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
    பதவியின் பெயர்: Prosthetic Craftsmanகாலியிடங்கள்: 64
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
    பதவியின் பெயர்: Occupational Therapistகாலியிடங்கள்: 18
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
    பதவியின் பெயர்: Pharmacistகாலியிடங்கள்: 333
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
    பதவியின் பெயர்: Dark Room Assistantகாலியிடங்கள்: 234
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
    பதவியின் பெயர்: Lab.Technician Grade-IIகாலியிடங்கள்: 524
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
    இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க  விரும்பும்  தகுதி வாய்ந்த நபர்கள், பணியிடங்களுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் மருத்துவப் பணியாளர்
    தேர்வு வாரிய இணைய தளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (on-line Registration) மூலம்  விண்ணப்பிக்கலாம்.
    இப்பணியிடங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியான ”www.mrb.tn.gov.in”-ல் ’Notification’ பகுதியில் வெளியிடப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    கிண்டி ஐ.டி.ஐ-யில் பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர் தொடர் அறிவுரை மையம் ஆகியவற்றில் காலியாகவுள்ள பணிமுனை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    செய்தி வெளியீடு எண்: 21  தேதி: 03.02.2016
    பணி: பணிமனை உதவியாளர் COPA (Computer Operator & Programming Assistant)
    தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    இனசுழற்சி: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொது முன்னுரிமை BC/MBC (GT Priority)
    பணி: பணிமனை உதவியாளர் Fitter (MARC - Mechanic Refrigerator and Air Condifioning)
    தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    இனசுழற்சி: பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமையுள்ளவர் (அருந்ததியர் பெண்கள்) மற்றும் (அருந்ததியர் விதவைகள்) BC Priority & Non Priority
    பணி: பணிமனை உதவியாளர் MARC (Mechanic Refrigerator and Air Condifioning)
    தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    இனசுழற்சி: ஆதிதிராவிடர் (அருந்ததியர்) SC (A) Priority & Non Priority
    பணி: பணிமனை உதவியாளர் Cutting & Tailoring) மகளிர் மட்டும்
    தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    இனசுழற்சி: பொது முன்னுரிமை (GT Priority)
    வயதுவரம்பும்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வி, சாதி விவரம், முன் அனுபவ விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை வருகின்ற 10.02.2016-க்குள் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை - 32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.