Pages

    மத்திய அரசின் உணவக பணியிடங்கள்: நேர்முக தேர்வு ரத்து

    நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவகங்களில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். மேலும் தேவைப்பட்டால் பணித்திறன் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவித்தார்.
    இதன்படி மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 1,352 இடங்களில் இயங்கும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் காலியாகும் இடங்களுக்கான ஆள்கள் தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது. என மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால், பணித்திறன் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு