Pages

    கல்வி மாநாடு: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடக்கிவைத்தார்!!

    தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்தும் திங்க்எஜு கல்வி மாநாட்டை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கிவைத்தார். சென்னை கிண்டியிலுள்ள தி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இந்த மாநாட்டை இன்று காலை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கிவைத்தார். ஆண்டுதோறும் இந்த மாநாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்தி வருகிறது.

    இதில் மத்திய அமைச்சர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், கல்வி நிபுணர்கள் கலந்துகொண்டு விவாதங்களை நடத்துவர். இந்த ஆண்டில் மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஃபாருக் அப்துல்லா, பல்லம் ராஜு, எம்.பி.க்கள் ராம் மாதவ், பூனம் மகாஜன், திரைப்பட இயக்குநர் சந்தோஷ் சிவன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கல்துகொண்டு பேசவுள்ளனர். மொத்தம் 2 நாள் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜிந்தால் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மெண்ட் அண்ட் பப்ளிக் பாலிசியின் ஷிவ் விஸ்வநாதன், டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தினேஷ் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்,

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு