அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிநடப்பு செய்தன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்துஅரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்க விரும்பினோம். ஆனால், அது குறித்து விரிவாக பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எனவே, இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
திமுக சார்பில் பேசிய துரைமுருகன், பாமக உறுப்பினர் கணேஷ்குமார், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோரும் இதே கருத்தை முன்வைத்தனர். அவையில், அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியேறுவதாகக் கூறினர்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு