Pages

    காலிப்பணியிடங்களை நிரப்ப கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் பாலசுப்ர மணியன் முன்னிலை வகித்தார். 



    ஆசிரியர் தவுபிக்ரகுமான் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர்களாக மணிமுத்து, மாரியம்மாள் தேர்வு செய்யப்பட்டனர்.கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அலுவலக பணி, நாட்டு நலப்பணி திட்டத்தை மேற்கொள்ள கட்டாயப் படுத்துகின்றனர். இதனால்கல்விப்பணி பாதிக்கிறது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2008க்கு பின் புதிய பணியிடங்கள் உருவாக்கப் படவில்லை. இதனால் பல பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.பணிமாறுதலுக்கான விண்ணப் பங்கள் பெறப்பட்டு 3 மாதங்களாகியும் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, முதுகலை ஆசிரியர் பணியிடமாகமாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு