Pages

    இந்தாண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை மாற்றப்படுகிறது.

     ‘புக் பேக்’ கேள்விகள் மட்டுமின்றி பாடங்களில் எந்தப்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். பாடத்தின் உள்ளடக்கத்தை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும்.


    2013-14 கல்வியாண்டில், அதுவரை இல்லாத அளவுக்கு 10 மாணவிகள் 100% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்கள். 2014-15 கல்வியாண்டில் 5 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றார்கள். 750 பேர் அதிக மதிப்பெண் பெற்றார்கள். சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் வாங்கினார்கள். ‘புக் பேக்’ கேள்விகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து மனனம் செய்ததால் தான் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடியது என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து,

    தேர்வுமுறையை மாற்றுவது பற்றி ஆய்வுசெய்ய ஒரு கமிட்டியை அமைத்தது பள்ளிக்கல்வித்துறை. அக்கமிட்டி, “ஆசிரியர்கள் தேர்வுக்குத் தேவையான கேள்விகளுக்கு மட்டுமே பயிற்சியளிக்கிறார்கள். அதை தவிர்க்க, புக் பேக் கேள்விகளைத் தவிர்த்து, பாடத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்க வேண்டும்...” என்று பரிந்துரைத்தது. இதையேற்ற பள்ளிக்கல்வித் துறை, கடந்த செப்டம்பரில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, தேர்வுமுறை மாறவிருப்பதைத் தெரிவித்தது. உடனடியாக, அரையாண்டுத் தேர்விலேயே வினாத்தாள் அமைப்பையும் மாற்றிவிட்டது.

    இந்த மாற்றத்தை பெரும்பாலான ஆசிரியர்கள் வரவேற்கவே செய்கிறார்கள். அதேநேரம், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென தேர்வுமுறையை மாற்றியதால் இந்தாண்டு தேர்வெழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குரலும் கேட்கிறது. “பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதன் நோக்கமே, அவற்றை மாணவர்கள் முழுமையாக படித்து உள்வாங்க வேண்டும் என்பதுதான்.

    ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மதிப்பெண்களை மட்டுமே இலக்கு வைத்து மாணவர்களைத் தயார் படுத்துகிறார்கள். அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளும் அந்த வழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன. இச்சூழலில், கேள்வித்தாள் மாற்றுவதென்பது
    வரவேற்கத்தக்க ஒரு முடிவு தான். ஆனால், அதை செயல்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல. ஏற்கனவே, 6 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    சில மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படவே இல்லை. அவகாசமே தராமல் தேர்வுமுறையை மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். கற்பித்தல் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களை கலந்து பேச வேண்டும். அவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...” என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு