நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை
Ø ஆரோவில் சர்வதேச நகரம்உருவான தின விழாஞாயிற்றுக்கிழமை அதிகாலைகொண்டாடப்பட்டது.
புதுச்சேரி அருகே உள்ளஆரோவில் சர்வதேச நகரம்,மகான் அரவிந்தரின் முக்கியசீடரான ஸ்ரீ அன்னை என்றுஅனைவராலும்அழைக்கப்படும், மீராஅல்போன்சாவின் கனவுநகரமாக 1968-ஆம் ஆண்டுபிப்ரவரி 28-ஆம் தேதிஉருவாக்கப்பட்டது.
புதுச்சேரி அருகே உள்ளஆரோவில் சர்வதேச நகரம்,மகான் அரவிந்தரின் முக்கியசீடரான ஸ்ரீ அன்னை என்றுஅனைவராலும்அழைக்கப்படும், மீராஅல்போன்சாவின் கனவுநகரமாக 1968-ஆம் ஆண்டுபிப்ரவரி 28-ஆம் தேதிஉருவாக்கப்பட்டது.
Ø முன்னாள் குடியரசு தலைவர்ஏ.பி.ஜே. அப்துல் கலாமின்அறிவியல் ஆலோசகர்பொன்ராஜ், இன்று அப்துல்கலாம் இலட்சிய இந்திய கட்சிஎன்ற புதிய கட்சியைதுவங்கினார்.
Ø உலகளவில் தொழிற்சாலைதொடங்குவதற்கான எளியநடைமுறைகள் தன்மையில்இந்தியா 142-ஆவது இடத்தில்உள்ளது. இந்திய அளவில்தொழிற்சாலைதொடங்குவதற்கானஇலகுத்தன்மையில், தமிழ்நாடு12- ஆவது இடத்திலேயேஉள்ளது.
Ø தமிழகத்தில் சமுதாய சுயஉதவிக்குழுபயிற்றுனர்களுக்கு 15 கோடிரூபாய் மதிப்பீட்டிலான அம்மாகைபேசிகளை வழங்கும்(27.2.2016) திட்டத்தினைமுதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார். தமிழ்நாட்டில் 92லட்சம்உறுப்பினர்களைக்கொண்டு 6லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கிவருகின்றன. இதில்ஊரகப்பகுதிகளில் சுமார் 4லட்சத்து 23 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. அம்மா கைபேசிதிட்டத்தின் கீழ் சமுதாயபயிற்றுனர்களுக்குகைபேசியுடன் சிம் சேவையும்இலவசமாக வழங்கப்படும். சிம்கார்டு பயன்பாட்டிற்கானமாதாந்திர கட்டணத்தைதமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனமேஏற்றுக்கொள்ளும்.
Ø மத்திய தோல் ஆராய்ச்சிமையத்துக்கு புதியஇயக்குநராக பி. சந்திரசேகரன்நியமிக்கப்பட்டுள்ளார்.கண்ணம்மாள் நினைவு விருது,சுலாப் சர்வதேச விருது உள்படபல விருதுகளையும் இவர்பெற்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Ø புகழ்பெற்ற நடன கலைஞர்ருக்மிணி தேவி அருண்டேலின்பிறந்தநாள் இன்று. இதனைமுன்னிட்டு அவரைகவுரவிக்கும் விதமாக கூகுள்நிறுவனம் சிறப்பு டூடுளைவெளியிட்டுள்ளது.1956 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது பெற்றுள்ளார். 1962 ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இவருடைய தலமையில் துவங்கப்பட்டது.
Ø பொதுத்துறை வங்கிகளின்உயர்நிலை அதிகாரிகள்நியமனம் தொடர்பாக மத்தியஅரசுக்குப் பரிந்துரைக்கவும்,வங்கிகள் தொடர்பானபிரச்னைகளைக் களையவும்அமைக்கப்பட்டுள்ள வங்கிகள்வாரியத்தின் முதல்தலைவராக, முன்னாள் சிஏஜிவினோத் ராய்நியமிக்கப்பட்டுள்ளார்.
Ø வைல்டு டிரைல்ஸ் (wildtrails)எனும் செயலி அருகில் உள்ள வனவிலங்குகளைப் பற்றி அறிவதற்காக பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.
Ø நாட்டின் மிகப்பெரிய துணைராணுவப் படைகளான மத்தியரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்), எல்லைப்பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்)ஆகியவற்றின் புதியதலைவர்கள் தில்லியில்திங்கள்கிழமைபதவியேற்கின்றனர். தெலங்கானா பிரிவைச் சேர்ந்த, 1982-ஆம் ஆண்டு ஐபிஎஸ்அதிகாரியாகத் தேர்வு பெற்றகே. துர்கா பிரசாத், சிஆர்பிஎஃப்படையின்தலைவராகப்பொறுப்பேற்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியானகே.கே.சர்மா, பிஎஸ்எஃப்படையின் தலைவராகபதவியேற்க இருக்கிறார்.
Ø ஒடிஸா முதல்வர் நவீன்பட்நாயக் போட்டியின்றிதொடர்ந்து 7வது முறையாகபிஜு ஜனதாதளம் (பிஜேடி)கட்சியின் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
Ø ஆசியக் கண்டத்தில் சுற்றுலாப்பயணிகளால் தேர்வுசெய்யப்பட்டுள்ள முதல் 10சிறந்த கடற்கரைகளில் 3இந்தியாவில் உள்ளதாகதனியார் இணையதளம்நடத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது.இந்தியாவில் கோவாமாநிலத்தில் உள்ள அகோந்தா,பாலோலேம் ஆகிய 2கடற்கரைகளும், அந்தமான்தீவில் உள்ள ராதாநகர்கடற்கரையும் சிறந்தகடற்கரைகளாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Ø சூரிய மின்சக்தி சாதனஉற்பத்தித் துறையில், பாரீஸ்பருவநிலை மாற்றஉடன்பாட்டை மீறும் வகையில்அமைந்துள்ள உலக வர்த்தகஅமைப்பின் (டபிள்யூடிஓ)தீர்ப்பை எதிர்த்துமேல்முறையீடு செய்வது என்றஇந்தியாவின் முடிவைகிரீன்பீஸ் தன்னார்வ அமைப்புஆதரித்துள்ளது.
Ø கடலோரக் காவல் படையின்புதிய தலைமை இயக்குநராக,மூத்த அதிகாரி ராஜேந்திர சிங்,சனிக்கிழமைபொறுப்பேற்றார்.
Ø கேரளா தான் நாட்டின் முதல்டிஜிட்டல் மாநிலம் எனகுடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பெருமை பொங்கஅறிவித்தார். மேலும் இந்தியாவிலேயே முதல் பாலின பூங்காவைத் திறந்துவைத்தார்.
Ø இந்தியாவில் இண்டர்நெட்டைஅதிகமாக பயன்படுத்துவதில்தமிழ்நாட்டிற்கு இரண்டாவதுஇடம் பெற்றுள்ளது என மத்தியஅரசு தகவல்வெளியிட்டுள்ளது. முதல்இடத்தை மகாராஷ்டிராமாநிலம் இடம் பெற்றுள்ளது.
Ø ஈர்ப்பு அலைகளை ஆராயஉலகிலேயே 3-வதாகஇந்தியாவில் லிகோ மையம்
பொருளாதார ஆய்வறிக்கை 2015-2016






ஆஸ்கர் விருதுகள்






Ø கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
Ø மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மகளிர் நடுவர்கள் பணியாற்றவிருப்பது இதுவே முதல்முறையாகும். அவர்களில் ஒருவர் கேத்தி கிராஸ்,மற்றொருவர் கிளேர் போலோசாக்.
Ø சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தலைவராக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபான்டினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Ø புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் சர்வதேச குதிரையேற்றப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு