நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016
v நீதிபதிகளுக்குப் போதிய பயிற்சியும், அனுபவ அறிவைப் பெறும் வாய்ப்பும் அவசியம் என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசினார்.தமிழகத்துக்குப் பாராட்டு:நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே மூன்று ஜுடிஷியல் அகாதெமிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே நீதித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
v ஜாட் இடஒதுக்கீட்டு பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது
v தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக43,051 மையங்கள் மூலம் 66.08லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
v உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 50சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.இதற்கென 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தைதிருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
v தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுவுக்கு கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம்அமைக்கப்படும்.
v கடலில் மீன்பிடிக்கும் பணியில் 18 வயதுக்கு கீழ் உள்ளோரை ஈடுபடுத்தக் கூடாது என்பது உள்பட கடல்மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம், பேரவையில் சனிக்கிழமை நிறைவேறியது.
v மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
v திருநெல்வேலி மாவட்டம்,மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் என்ஜினின் தொடர் உந்தும திறன் சோதனை முழு வெற்றியடைந்துள்ளது. இந்த என்ஜின்ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3ராக்கெட்டில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக,இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கிரையோஜெனிக் என்ஜின்கள் இந்திய விஞ்ஞானிகளின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும்.ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் திரவநிலைக்கு குளிரூட்டப்பட்டு இந்த என்ஜினில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
v அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்குத் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியது . இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 2009-இல் திமுக ஆட்சியில் மூத்த பொறியாளர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுஅமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.
v புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலையில் அருணகிரிநாதர் தங்கியிருந்து முருகனை வழிபட்டதாகக் கூறப்படும் மலைக் குகை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
v தமிழக அரசின் கடன் சுமை 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைக்குள்தான் இருக்கிறது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
v பாஸ்மதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்குவது தொடர்பாக அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்தியப் பிரதேச அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்துள்ளது.
v பிகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் தெக்ரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், கடவுள்ஆஞ்சநேயரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
v நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை(பிப்.23) தொடங்குகிறது.
v நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கரில் கிராமங்களை நவீனமயமாக்கும் "ரூர்பன்'திட்டத்தை தொடங்கி வைத்தார்.
v சட்டீஸ்கர் மாநிலம் கோடாபக்ராய் கிராமத்தைச் சேர்ந்தவர் குன்வார் பாய். 104வயதான அவர் தனது 8ஆடுகளை விற்று தனதுவீட்டில் இரு கழிவறைகளை கட்டியுள்ளார்.
v விமானங்களில் பயணிகளை வரவேற்று கவனிக்க பணிப் பெண்கள் இருப்பதுபோலரயிலிலும் பணிப் பெண்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தில்லி - ஆக்ரா இடையே அடுத்த மாதம் இயக்கப்பட இருக்கும்கதிமான் எக்ஸ்பிரஸ்ரயிலில் இந்த புதிய சேவை அளிக்கப்பட இருக்கிறது.
v அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி,பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 9ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
v அருணாசலப் பிரதேசத்தில் வெளிப்படைத் தன்மைக்கும்,நிர்வாகத் திறமைக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றுமாநிலத்தின் 8-ஆவது முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் கலிகோ புல் தெரிவித்தார்.
v சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.)விவகாரம் தொடர்பான அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கொண்ட உயரதிகாரக் குழுவின் தலைவராக, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா,வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
v ரயில் பயணிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்யவும்,உறுதிப்படுத்தவும் பாஜகமூத்த தலைவர் எச்.ராஜாதலைமையில் ரயில் பயணிகள் வசதிகளுக்கான புதிய குழுவை ரயில்வே வாரியம் நியமித்துள்ளது.
v வேளாண் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க வரும்ஏப்ரல் 14 ஆம் தேதி தேசிய டிஜிட்டல் வேளாண் சந்தை தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
v நாட்டில் மொத்தமுள்ள 46மத்திய பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் 207 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
v 10,000 கிலோ மீட்டர் தூரம் பாராசூட் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஆந்திராவைச் சேர்ந்த விமானப்படை வீரர் மோகன் ரெட்டி ஈடுபட்டுள்ளார்.
v உலகளாவிய வர்த்த எளிமையாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. அதைக் கண்காணிப்பதற்காக தேசியக் குழுவொன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
v யுகாண்டாவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவராக யோவேரி முஸவேனி அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 5-வது தவணைக்கும் அவர் அதிபராக நீடிக்கின்றார்.
v ஈர்ப்பாற்றல் அலைக் கூர்நோக்கு ஆய்வகமானது (லிகோ) இந்தியாவில் 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
v நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 54பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்ஆகியோர் 56 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.
v ஆசிய ரக்பி போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில்சனிக்கிழமை தொடங்குகிறது
v இந்திய டேபிள் டென்னிஸ் நடுவர் எஸ். ஸ்ரீதர், ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து டேபிள் டென்னிஸ் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஒரே நடுவர் அவர் மட்டும்தான். இதற்கு முன்பு ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் கேம்ஸ் போன்றவற்றில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு