Pages

    வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் இடத்திலேயே வேலை வழங்க தமிழக அரசு ஏற்பாடு

    மழை வெள்ளத்தால் நீர்நிலை ஓரங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
    சென்னையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்கள் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். இவர்களுக்கு சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
    இத்திட்டப்பகுதிகளில் கழிவுநீரகற்று அமைப்புகள், சாலைகள், மழைநீர் வடிகால், குப்பைத் தொட்டிகள், தெருமின் விளக்குகள் கான்கீரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலை கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    இதுவரை 3,590 பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் திட்டப்பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்த முதல்வர் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிடட்டார்.
    இதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக நாளை (பிப்ரவரி 6) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் உள்ள 150 தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது.
     இந்த முகாமில் இரவு காவலர், ஓட்டுநர், சமையலர், கம்பியர் உள்ளிட்ட 8000-க்கும் மேலான பணிகளுக்கு, பணிநியமன ஆணைகளை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது. 
    வேலையளிப்போர் எதிர்பார்க்கும் சிறப்பு திறன்களை அறிந்து அதற்கான பயிற்சிகளை அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 25க்கும் மேற்பட்ட தொழிற்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வளர்ச்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுள் 4,200 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூபாய் 4 கோடி செலவில் திறன் பயிற்சிகள் வழங்க பயிற்சியாளர்கள் தேர்வு செய்யவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    அயல்நாட்டில் வேலைவாய்ப்பினை பெற விழைவோர், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவும் பதிவுகளைப் புதுப்பித்து கொள்ளவும் கூடுதல் பதிவுகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    மேலும், சுய தொழில் தொடங்க ஆலோசனைகளும் போட்டித்தேர்வுகள் குறித்த ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மறுகுடியமர்வு திட்டப்பகுதிகளிலிருந்து துரைப்பாக்கத்திற்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  தற்போது மறுகுடியமர்வு செய்யப்பட்ட 3,590 குடும்பங்களுடன் ஏற்கெனவே ஒக்கியம்-துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் அதனருகில் வசித்து வரும், குடிபெயர்ந்த 29,410 குடும்பங்களும் ஆக மொத்தம் 33,000 குடும்பங்களும் இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உள்ளது.
    ஆகவே, ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மறுகுடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2 comments:

    1. வரவேற்க பட வேண்டிய நல்ல திட்டம்.,
      தமிழக முல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி..,

      ReplyDelete
    2. வரவேற்க பட வேண்டிய நல்ல திட்டம்.,
      தமிழக முல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி..,

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு