Pages

    மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல்

    பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். 

    தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற, பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ஜூலை, 25 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

    விண்ணப்பிக்க, ஆக., 5 கடைசி நாள். இதுவரை, 6,000 விண்ணப்பங்களுக்கு மேல், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்துள்ளன. இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என, www.tnhealth.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு.

    CLICK HERE-WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER

    பழைய பென்சன் திட்டம் தொடர அரசு அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் தொடக்க உத்தரவு



    தொடக்கக்கல்வி - காமராஜர் பிறந்தநாள் - கல்விவளர்ச்சி நாள் "சிறப்பு பரிசளிப்பு திட்டம்"- மாவட்டம் தோறும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000/- நடுநிலைப் பள்ளிக்கு ரூ.12,500/- நிதி அனுமதித்து உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்.




    தொடக்கக்கல்வி - AEEO PANEL - இல் 33 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெயர்களை நீக்கி இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


     

    அடுத்த ஆண்டு முதல் 'நீட்' கட்டாயம் :மசோதா நிறைவேறியது.

    அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
    தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    அவசர சட்டம் :இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவ சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம்லோக்சபாவில்நிறைவேறியது. இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி, அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    தமிழகம் எதிர்ப்பு : இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.விவாதத்தின்போது, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,'' என்றார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும், இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள், மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

    ஜே.பி.நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பா.ஜ.,

    சித்தா, ஆயுர்வேதம் 5,700 பேர் விண்ணப்பம்

    சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு, 5,700 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். முந்தைய ஆண்டை விட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. 
    இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது. 5,702 பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய கல்வியாண்டில், 8,100 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதைவிட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கமிஷன்' பிரச்னையால் முடங்கியதா கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்?

    கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) சுருக்கமாக ஐ.சி.டி.

    பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டத்தை (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.

    அதன்படி மத்திய அரசின் (ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும்) அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த திட்டத்துக்கான நிதியைப் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. கடந்த 2011-12 ம் கல்வியாண்டில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை 4345 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்த, மத்திய அரசு முதல் கட்டமாக 43 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

    2011-ம் ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ரூ.250 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால், பெயருக்கு முதல்வர் கடந்த முறை வெற்றி பெற்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மட்டும் இதை செயல்படுத்தி விட்டு, பாதியில் ‘அம்போ’ என்று விட்டு விட்டார்கள். முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்த ரூ. 43 கோடியையே சரியாக செலவழிக்கவில்லை.

    "43 கோடி ரூபாய் என்ன ஆச்சு. அந்த திட்டத்தை ஏன் கிடப்பில் போட்டீர்கள்" என்று கேள்விகள் கேட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறையை விழி பிதுங்க செய்து விட்டது, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பிளான் அப்ரூவல் போர்டு.  2011-12ம் ஆண்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு பள்ளிக்கும் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விட வேண்டும். ஆனால், கமிஷன் பிரச்னையால் டெண்டர் விவகாரம் ‘‘ஜவ்வு மிட்டாய்’’ போல் இழுத்துக் கொண்டு போனது. ஒரு வழியாக,  'ஐ.சி.டி., திட்டத்துக்கான டெண்டர், 11.9.2013-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும்' என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ன காரணமோ அப்போதும் டெண்டர் நடக்கவில்லை. இதன் பின்னணியில், பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் தலையீடு இருப்பதாகத் தகவல்கள் கசிந்தன.

    ஐ.சி.டி., திட்டம் பற்றி தமிழக அரசிடம் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டதற்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய பதில்தான் ரொம்பவும் வேடிக்கையானது.

    '2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால், டெண்டர் விட முடியவில்லை' என்று பதில் சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால் உண்மை நிலவரமோ வேறு. அதாவது, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு முதல் கட்டமாக நிதி வழங்கியதோ 2011-12ம் கல்வியாண்டில். டெண்டர் அறிவிப்பு வெளியானதோ 2013-ம் ஆண்டு. சட்டசபை தேர்தல் நடந்ததோ 2016-ம் ஆண்டு மே மாதம். எவ்வளவு குளறுபடிகள்.

    இது பற்றி பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

    "எந்த திட்டமும் உருப்படியாக நிறைவேறவில்லை. முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த பல திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. உயர் அதிகாரிகளின் ‘கமிஷன்’ பிரச்னையால் அந்த திட்டங்கள் எல்லாம் அப்படியே அந்தரத்தில் தொங்கியபடி இருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இது பற்றி எதுவும் தெரிவதில்லை'' என்று காதை கடிக்கின்றனர்.

    இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சபீதாவை தொடர்பு கொண்டு பேசினோம். "ஐ.சி.டி., டெண்டர் விவகாரத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவில்லை. அதனால் டெண்டர் தள்ளிப்போகிறது. விரைவில் புதிதாக டெண்டர் விடப்பட்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படும்" என்றார்.

    Source:www.vikatan.com
    http://bit.ly/2a8y1Mn

    பகுதிநேர கணினி ஆசிரியர்கள் நியமன முறைகேடு; சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களை நியமிப்பு -RTI


    TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

    அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளியில் கடந்த 13.12.2011 அன்று பட்டதாரி ஆசிரியையாக தூத்துக்குடி அரசடி பனையூரைச் சேர்ந்த பூமணி என்பவர் நியமிக்கப்பட்டார்.இவரது நியமனத்தை அங்கீகரிக்கும்படி பள்ளி நிர்வாகம் தூத்துக்குடி கல்வி மாவட்ட அதிகாரிக்கு மனு அனுப்பியது.ஆசிரியர் தகுதித்தேர்வில் பூமணி தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவரது நியமனத்தை அங்கீகரிக்க மறுத்து 5.6.2014 அன்று கல்வி அதிகாரி உத்தரவிட்டார். ஐகோர்ட்டில் மனு சிறுபான்மை பள்ளியில் நியமிக்கப்படும்ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எனது நியமனத்தை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று பூமணி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இதேபோன்று 30-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் பூமணி சார்பில் வக்கீல் டி.ஏ.எபனேசர் ஆஜராகி வாதாடினார்.

    சம்பளம் வழங்க வேண்டும்

    மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு மனு செய்துள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ளது. ஆனால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, மனுதாரருக்கும், மனு தாக்கல் செய்துள்ள மற்றவர்களுக்கும் தமிழக அரசு 4 வாரத்துக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை வேலையில் இருந்து நிறுத்தக்கூடாது.

    இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுவின் தீர்ப்பை பொறுத்து இருக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜெ., மிரட்டுகிறார் - பாதுகாப்பு கேட்டு மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கதறல்

    டெல்லி: தமது எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மிரட்டுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா கூறியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பாதுகாப்பு இல்லாததால் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கதறினார். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று கதறிய அவர், எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என சசிகலா புஷ்பா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர் தமக்கு பதவி கொடுத்த ஜெயலலிதாவை மதிப்பதாக தெரிவித்த அவர், அதற்காக அவருக்கு தம்மை அடிப்பதற்கான அதிகாரம் கிடையாது என்றும் மத்திய அரசு தம்மை பாதுகாக்க வேண்டும் என கோரினார்.

    ஜெயலலிதா அறைந்தார்: 

    அப்போது பேசிய அவர் திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து விளக்கமளிக்க நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது, எம்.பி பதவியை ராஜினாமா செய்ய கூறி தம்மை அறைந்ததாக கதறியபடி கூறினார். மாநிலங்களவையில் மேற்கண்டவாறு பேசிய சசிகலா புஷ்பாவிற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    காங்கிரஸ் ஆதரவு: 

    இதனையடுத்து இவ்விகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், சசிகலா புஷ்பா பேச அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். ஒரு எம்.பி-யை அவையில் பேசக்கூடாது என தடுக்க அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை இல்லையென்றார். 

    குரியன் உறுதி: 

    சசிகலா புஷ்பாவின் குற்றச்சாட்டுகளை கேட்ட மாநிலங்களவைத் தலைவர் குரியன், சசிகலாவிற்கு தேவைப்பட்டால் அரசு பாதுகாப்பு வழங்கும் என உறுதியளித்தார். 

    சிவாவிடம் சசிகலா மன்னிப்பு: 

    டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது எம்.பி திருச்சி சிவாவை தாக்கியதற்காக அவரிடம் சசிகலா புஷ்பா வருத்தம் தெரிவித்தார். திமுகவின் முக்கிய பிரமுகர் என்ற முறையில் சிவா மீது தமக்கு மரியாதை இருப்பதாக குறிப்பிட்டார்.

    அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்: 

    ஜெயலலிதா மீது சரமாரி புகார் தெரிவித்த சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

    பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம்

           பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

               தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு பி.எட். இடங்களில் 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3-வது வாரத்தில் நடைபெறவுள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் 9-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரிலும், தபாலிலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். அதன் பிறகு வந்துசேரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பி.இ. பட்டதாரிகளுக்கு 20 சதவீதம்: தமிழக அரசின் அரசாணைப்படி, 2015-16 கல்வியாண்டு முதல் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். நிகழாண்டில் இவர்களுக்கு இயற்பியல் அறிவியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய 4 பிரிவுகளில் மட்டும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ப்ஹக்ஹ்ஜ்ண்ப்ப்ண்ய்ஞ்க்ர்ய்ண்ஹள்ங்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் அறியலாம்.

    மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

    கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

     ஆடி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி லட்ச தீபதிருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி, குறிப்பிட்ட நாளில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி, குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும். அவசர தேவைகளை கருத்தில் கொண்டு  மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் போதிய பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்.

    துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
    பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் http://mhrd.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை

    'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் சிலர், 'டேம்ஸ்' என்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், வாட்ஸ் ஆப்பில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு ஆலோசனை நடத்தினர். அந்த பதிவுகளை சிலர், கல்வி அதிகாரிகளுக்கு 'இ-மெயில்' அனுப்பி உள்ளனர்.இதையடுத்து, பாரதிராஜா, நடராஜன், முருகேசன் மற்றும் லிங்கத்துரை என, நான்குஆசிரியர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு மற்றும் மாவட்ட நிர்வாக ரீதியான செயல்பாடுகளை, வாட்ஸ் ஆப்பில் விமர்சனம் செய்வது, அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானது. ராமநாதபுரம் கலெக்டர் விசாரணை நடத்த உள்ளதால், அவர் முன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இவர்களில், பாரதிராஜா, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் முருகேசனும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்.இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிஜெயக்கண்ணுவிடம் கேட்டபோது, ''எனக்கு இதுப்பற்றி எதுவும்தெரியாது. மாவட்ட கலெக்டர், 'மெமோ' கொடுக்க சொன்னார்.கருத்துரிமையை நான் எதிர்க்கவில்லை,'' என்றார்.

    இதற்கிடையில், வாட்ஸ் ஆப்பில் விவாதித்ததால், நோட்டீஸ் அளித்த சம்பவத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.கல்வித்துறை அதிகாரிகளிடம், அதிகார போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களிடம் எதற்கும்கருத்து கேட்பது இல்லை. வாட்ஸ் ஆப் குரூப் என்பது பூட்டிய வீட்டிற்குள், உறுப்பினர்கள் பேசிக்கொள்வது. அதை எட்டிப் பார்த்து நட வடிக்கை எடுப்பது அநாகரிக செயல். அடக்கு முறை செய்தால், மீண்டும் இயக்கங்களை இணைத்து போராட வேண்டியிருக்கும்.கே.பி.ஓ.சுரேஷ், மாநில தலைவர்,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங் களில் கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கை தேவை. இதுபோன்ற செயல்பாடுசிக்கலை ஏற்படுத்தும். தங்கள் குறைகளை அதிகாரிகளை சந்தித்து கூற வேண்டும்.

    சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர்,தமிழ்நாடு உயர், மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்