Pages

    'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை

    'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் சிலர், 'டேம்ஸ்' என்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், வாட்ஸ் ஆப்பில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு ஆலோசனை நடத்தினர். அந்த பதிவுகளை சிலர், கல்வி அதிகாரிகளுக்கு 'இ-மெயில்' அனுப்பி உள்ளனர்.இதையடுத்து, பாரதிராஜா, நடராஜன், முருகேசன் மற்றும் லிங்கத்துரை என, நான்குஆசிரியர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு மற்றும் மாவட்ட நிர்வாக ரீதியான செயல்பாடுகளை, வாட்ஸ் ஆப்பில் விமர்சனம் செய்வது, அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானது. ராமநாதபுரம் கலெக்டர் விசாரணை நடத்த உள்ளதால், அவர் முன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இவர்களில், பாரதிராஜா, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் முருகேசனும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்.இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிஜெயக்கண்ணுவிடம் கேட்டபோது, ''எனக்கு இதுப்பற்றி எதுவும்தெரியாது. மாவட்ட கலெக்டர், 'மெமோ' கொடுக்க சொன்னார்.கருத்துரிமையை நான் எதிர்க்கவில்லை,'' என்றார்.

    இதற்கிடையில், வாட்ஸ் ஆப்பில் விவாதித்ததால், நோட்டீஸ் அளித்த சம்பவத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.கல்வித்துறை அதிகாரிகளிடம், அதிகார போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களிடம் எதற்கும்கருத்து கேட்பது இல்லை. வாட்ஸ் ஆப் குரூப் என்பது பூட்டிய வீட்டிற்குள், உறுப்பினர்கள் பேசிக்கொள்வது. அதை எட்டிப் பார்த்து நட வடிக்கை எடுப்பது அநாகரிக செயல். அடக்கு முறை செய்தால், மீண்டும் இயக்கங்களை இணைத்து போராட வேண்டியிருக்கும்.கே.பி.ஓ.சுரேஷ், மாநில தலைவர்,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங் களில் கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கை தேவை. இதுபோன்ற செயல்பாடுசிக்கலை ஏற்படுத்தும். தங்கள் குறைகளை அதிகாரிகளை சந்தித்து கூற வேண்டும்.

    சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர்,தமிழ்நாடு உயர், மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு