Pages

    சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்.

    அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில்,356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. 
    இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். எப்போது கலந்தாய்வு நடக்கும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    கல்லுாரிகளை ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான, 'ஆயுஷ் கவுன்சில்' அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இந்திய மருந்துவம் சார்ந்த, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இதுவரை ஆயுஷ் கவுன்சில் அனுமதி தரவில்லை. இதனால், கலந்தாய்வு தேதி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து,

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, அக்., மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆயுஷ் கவுன்சில் முறையான ஆய்வு நடத்தி வருகிறது; விரைவில், அனுமதி கிடைத்து விடும். குறித்த காலத்திற்கு முன்னரே, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்' என்றார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு