தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது.
2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்திவிரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்:
23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.
சிக்கலுக்கு தீர்வு என்ன:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணைபிறப்பிக்க வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு