Pages

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 1

    குறவஞ்சி

    • “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது.
    • குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
    • குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
    • குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
    • குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
    • குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
    • குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்.
    • இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்த இலக்கியம் குறவஞ்சி
    • குறவஞ்சி பல வகைப் பாக்கள் கலந்து வரப் பாடப்படும்.
    • குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் = குமரகுருபரரின் மீனாட்சிக் குறம்
    • முதல் குறவஞ்சி நூல் = குற்றால குறவஞ்சி
    • பன்னிரு பாட்டியல் குறவஞ்சியை,
    இறப்பு நிகழ்வெதிர் வெண்ணுமுக் காலமும்
    திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே

    குறவஞ்சி நூல்கள்:

    திருக்குற்றால குறவஞ்சி(முதல் குறவஞ்சி)திருகூடராசப்ப கவிராயர்
    சரபேந்திர பூபாலக் குறவஞ்சிகொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
    தமிழரசி குறவஞ்சிவரத நஞ்சையப்ப பிள்ளை
    பெத்தலேகம் குறவஞ்சிவேதநாயக சாஸ்திரி
    கூட்டுறவுக் குறவஞ்சிதஞ்சைவாணன்
    விஸ்வநாத சாஸ்திரிவண்ணக்குறவஞ்சி

    திருக்குற்றால குறவஞ்சி:

    • இதன் ஆசிரியர் = திரிகூடராசப்ப கவிராயர்
    • இவர் குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர்
    • முதல் குறவஞ்சி நூல் இதுவே
    • மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவருக்கு “குறவஞ்சி மேடு” என்னும் நிலப்பகுதியை இனாமாக வழங்கினார்.
    • இந்நூலின் தலைவன் = திருக்குற்றால நாதர்
    • இந்நூலின் தலைவி = வசந்தவல்லி
    • இவர் இயற்றிய மற்ற நூல்கள் = குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி:

    • இதன் ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
    • இவர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தவர்.
    • இவரின் ஆசிரியர் = வைத்தியநாத தேசிகர்
    • இவர் தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
    • இவர் இயற்றிய நூல்கள் = கொட்டையூர் உலா, திருவிடைமருதூர் புராணம், திருமண நல்லூர் புராணம், கோடீச்சரக் கோவை
    • இந்நூலின் பாட்டுடைத் தலைவன் = தஞ்சை சரபோஜி மன்னர்
    • நூலின் தலைவி = மதனவல்லி

    தமிழரசி குறவஞ்சி;

    • தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
    • 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
    • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
    • தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
    • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
    • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
    • இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
    • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
    • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
    • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
    • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணைக இந்நூலை இயற்றினார்.
    • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

    பெத்தலகேம் குறவஞ்சி:

    • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
    • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
    • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
    • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
    • ஊர் = திருநெல்வேலி
    • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
    • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
    • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
    • இவரை “ஞானதீபக் கவிராயர்” என்றும் “அண்ணாவியார்” என்றும் போற்றுவர்.

    பரணி

    • பரணி நூல்களின் இலக்கணம் கூறுவது = இலக்கண விளக்கப் பாட்டியல்
    ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி
    • பரணி 13 உறுப்புகளைக் கொண்டது
    • தோற்றவர் பெயரால் இந்நூல் அமையும்
    • பரணி என்பது ஒரு நட்சத்திரம்(நாள்)
    • இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணியாகும்
    • பரணியின் பாவகை = கலித்தாழிசை
    • “பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்த நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராகி வந்தது என்றும்” கூறுகிறார் உ.வே.சா
    • போர்க்கடவுளாகிய கொற்றவைக்கு உரிய நாள் = பரணி
    • முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி
    • பரணி பாடுவதில் வல்லவர் செயங்கொண்டார்

    பரணி நூல்கள்:

    கலிங்கத்துப்பரணிசெயங்கொண்டார்
    தக்கயாகப் பரணிஒட்டக்கூத்தர்
    அஞ்ஞவதைப் பரணிதத்துவராயர்
    பாசவதைப் பரணிவைத்திய நாத தேசிகர்

    கலிங்கத்துப்பரணி:

    • முதல் பரணி நூல் இதுவே
    • இந்நூலின் ஆசிரியர் = செயங்கொண்டார்
    • இவர் தீபங்குடி என்னும் ஊரினர்
    • முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமானை அனுப்பி கலிங்க மன்னன் ஆனந்தவர்மனை வென்றதை பற்றி கூறுகிறது இந்நூல்.
    • இவரின் படைப்புகள் = தீபங்குடி பத்து, இசையாயிரம், மடல், உலா
    • இந்நூலை “தென்தமிழ் தெய்வபரணி” என ஒட்டக்கூத்தர் பாராட்டுகிறார்.
    • செயங்கொண்டாரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என பலபட்டடை சொக்கநாதர் பாராட்டுகிறார்.
    • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
    • கருணாகரத் தொண்டைமானை “வாண்டையார் கோன்” என்கிறார் செயங்கொண்டார்
    • இவர் “கவிச்சக்ரவர்த்தி” என்ற பட்டம் பெற்றவர்.

    தக்கயாகப்பரணி:

    • இதன் ஆசிரியர் = ஒட்டக்கூத்தர்
    • தட்சன் சிவபெருமானை மதிக்காது யாகம் செய்ய அதனால் சினங்கொண்ட சிவனின் மைந்தன் வீரபத்திரன் யாகத்தை அழித்து, உதவிக்கு வந்தோரை வென்று தட்சனின் தலையைத் துண்டித்த புராண வரலாற்றை கூறுவது. தோற்ற தக்கனின் பெயரால் மரபுப்படி பெயர் பெற்றது.
    • இவர் மலரி என்னும் ஊரினர்.
    • இவரின் இயற்பெயர் = கூத்தன்
    • இவரின் சிறப்புப்பெயர்கள் = கவிராட்சசன், கவிச்சக்ரவர்த்தி,காளக்கவி, சர்வஞ்சக் கவி, கௌடப் புலவர்
    • இவரின் படைப்புகள் = மூவருலா, ஈட்டி எழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை
    • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
    • தக்கயாகப்பரணியின் வேறு பெயர் = வீரபத்திர பரணி
    • இவர் கலைமகளுக்கு என்று கூத்தனூரில் தனி கோயில் கட்டினார்

    முத்தொள்ளாயிரம்

    • முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்டது.
    • ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
    • “புறத்திரட்டு” என்னும் நூல் வழியாக 108 வெண்பாக்களும், பழைய உரை நூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
    • மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
    • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
    • சேரர் பற்றி 23 பாடல்களும், சோழர் பற்றி 46 பாடல்களும், பாண்டியர் பற்றி 61 பாடைகளும் என மொத்தம் 130 பாடல்கள் கிடைத்துள்ளன.
    • இதில் அகப்பாடல்கள் 75, புறப்பாடல்கள் 55 உள்ளன

    தூது

    • தன் கருத்தைப் பிறிதொருவருக்கு தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது.
    • தூது இரு வகைப்படும் = அகத்தூது, புறத்தூது
    • “காமம் மிக்க கழிபடர் கிளவி” என்ற தொல்காப்பிய அடியின் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் தூது
    • “தொடை(மாலை) வாங்கி வா” என்று கூறும் இலக்கியம் தூது
    • தூது கலிவென்பாவால் பாடப்படுவது
    • முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது(உமாபதி சிவம்)
    • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல்
    • தூதாக அனுப்பப்படுபவை = அன்னம், மயில், கிலி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்
    • இப்பத்தும் தூதாக அனுப்பி பாடியவர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை(தச விடு தூது)

    தூது நூல்கள்:

    உமாபதி சிவம்நெஞ்சு விடு தூது(முதல் தூது நூல்)
    பலபட்டடை சொக்கநாதப் புலவர்அழகர் கிள்ளை விடு தூது
    சுப்ரதீபக் கவிராயர்விறலி விடு தூது
    வெள்ளைவாரணர்காக்கை விடு தூது
    ஆசிரியர் பெயர் தெரியவில்லைதமிழ் விடு தூது
    அமிர்தம் பிள்ளைதமிழ் விடு தூது
    மீனாட்சிசுந்தரம் பிள்ளைதச விடு தூது

    நெஞ்சு விடு தூது:

    • இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவம்
    • ஆசிரியர் தம்மை தலைவியாகவும், தம் குருநாதர் மறைஞான சம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார்.
    • இந்நூலில் 129 கண்ணிகள் உள்ளன.

    தமிழ் விடு தூது:

    • ஆசிரியர் பெயர் தெரியாத இத்தூது நூல் மிக சிறப்பான நூல் ஆகும்.
    • மதுரை சொக்கநாதரிடம் தலைவி ஒருத்தி தமிழை தூது அனுப்புகின்றாள்.
    • இந்நூலில் 268 கண்ணிகள் உள்ளன.

    அழகர் கிள்ளை விடு தூது:

    • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
    • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
    • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
    • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
    • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
    • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
    • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு