Pages

    TET தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

    மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது.
    இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய கல்விச் சட்டத்தின் படி, '2011க்கு பின், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், 2016 நவம்பருக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.இல்லையென்றால், அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    இந்நிலையில், தமிழக அரசின் காலக்கெடு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக டெட் தேர்வையே தமிழக அரசு நடத்தவில்லை. அதனால், டெட் தேர்ச்சி பெறாதவர்களுக்கான அவகாசத்தை, தமிழக அரசு நீட்டிக்குமா அல்லது தேர்வை அறிவிக்குமா என, ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு