Pages

    TNPSC GR4 : தமிழ் எளிமையான இலக்கண விளக்கம்

    தமிழ் இலக்கண யாப்பு ஒரு எளிய அறிமுகம்

    நமது பழங்கால தமிழ் இலக்கியங்களை சுவைக்க வேண்டுமெனில் நமக்கு யாப்பு முறையாக தெரிந்து இருக்க வேண்டும் . யாப்பு என்பதற்கு பொருள் கட்டுதல் என்பதாகும் அதாவது செய்யுளை கட்டுவதாகும் யாப்பினால்தான் கலங்களை கடந்தும் கட்டழகு குலையாமல் தமிழ் விளங்கி வருகிறது . எழுத்து, அசை , சீர் , தளை, அடி தொடை என்பன யாப்பின் உறுப்புகள் வாருங்கள் நண்பர்களே யாப்பு எனும் கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம் .


    எழுத்து

    செய்யுளை இயற்ற அடிப்படையானது எழுத்து ஆகும் .உயிரெழுத்துகள் , மெய் எழுத்துகள் , உயிர்மெய் எழுத்துகள் ஆகியன இவற்றில் அடங்கும்

    அசை

    எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்து சேர்ந்து நின்றோ ஓசை உண்டாகுமாறு நிற்பது அசை ஆகும் . இது நேரசை , நிரையசை என இருவகைப்படும் நேரசை கண்டு பிடிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளும் முன் குறில் , நெடில் ஒற்று என்பதை அறிவோம்
    குறில் : குறுகிய ஓசை உடையது குறில் ஆகும்
    நெடில் : நீண்ட ஓசை உடையவை நெடில் ஆகும்
    ஒற்று : புள்ளி வைத்து எழுதப்படும் எழுத்து

    நேரசை கண்டு பிடிக்கும் வழிமுறைகள்

    குறில் தனித்து வருவதும் , குறிலை அடுத்து ஒற்று வருவதும் , நெடில் தனித்து வருவதும் , நெடிலை அடுத்து ஒற்று வருவதும் நிரையசை ஆகும்
    சொல்/க = குறிலை அடுத்து ஒற்று /குறில் தனித்து
    மா = நெடில் தனித்து
    மான் = நெடிலை அடுத்து ஒற்று


    நிரையசை கண்டு பிடிக்கும் வழிமுறைகள்

    இரு குறில் தனித்தும் , இரு குறில் அடுத்து ஒற்று வருவதும் , குறில்நெடில் தனித்தும் , குறில் நெடில் அடுத்து ஒற்று வருவதும்  நிரையசையாகும்

    பல – இரு குறில் தனித்து வருவது
    மலர் – இரு குறில் அடுத்து ஒற்று வருவது
    பலா – குறில் நெடில் தனித்து வருவது
    வரார் – குறில் நெடில் அடுத்து ஒற்று வருவது

    சீர்

    அசை  ஒன்றோ பலவோ சேர்ந்து அடிக்கு உறுப்பாவது சீர் ஆகும் இது ஓரசை சீர் , ஈரசை சீர் , மூவசை சீர் , நான்கசை சீர்
    ஓரசை சீர்
    நேர் – நாள்
    நிரை – மலர்
    ஈரசை சீர்
    நேர்/நேர் – தேமா
    நிரை/நேர் – புளிமா
    நிரை/நிரை – கருவிளம்
    நேர்/நிரை – கூவிளம்
    மூவசைசீர்

    நேர்/நேர்/நேர் – தேமாங்காய்
    நிரை/நேர்/ நேர் – புளிமாங்காய்
    நிரை/நிரை/நேர் – கருவிளங்காய்
    நேர்/நிரை/நேர் – கூவிளங்காய்
    நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
    நிரை/நேர்/நிரை – புளிமாங்கனி
    நிரை/நிரை/நிரை – கருவிளங்கனி
    நேர்/நிரை/நிரை – கூவிளங்கனி


    தளை

    நின்ற சீரின்  ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும் இது ஒன்றிய வஞ்சித்தளை , ஒன்றாவஞ்சித்தளை , கலித்தலை ,வெண்சீர் வெண்டளை ,  நேரொன்றாசியத்தளை , நிரையொன்றாசிரியத்தளை என ஏழு வகைப்படும்

    அடி

    சீர்கள் தொடர்ச்சியாக அமைவது அடியாகும்
    இரண்டு சீர்க்களால் ஆகிய அடிக்கு குறளடி என்று பெயர்
    மூன்று சீர்களால் ஆகிய அடிக்கு சிந்தடி என்று பெயர்
    நான்கு சீர்களால் ஆகிய அடிக்கு அளவடி என்று பெயர்
    ஐந்து சீர்களால் ஆகிய அடிக்கு நெடிலடி என்று பெயர்
    ஆறு சீர்களால் ஆகிய அடிக்கு கழிநெடிலடி என்று பெயர்

    தொடை

    எழுத்துகள் ஒன்றி வர தொடுப்பது தொடை ஆகும்  செய்யுளுக்கு ஓசை நயத்தை கொடுப்பவை தொடை ஆகும் இவை எதுகைத்தொடை , மோனைத்தொடை, முரண்தொடை, இயைபுதொடை, அளபெடைத்தொடை என ஐந்து வகைப்படும்
    அன்புள்ள நண்பர்களே …
    யாப்பு என்பது ஒரு கடல் அதில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் எனில்  யாப்பின் உறுப்புகளுக்கு செய்யுள்களுடன் விளக்கமளிக்க வேண்டும் எனவே யாப்பின் உறுப்புகள் பற்றி ஒரு தொடர் பதிவு இடலாம் என கருதியுள்ளேன்  இதற்கு உங்களின் ஆதாரவு மிக மிக அவசியம் மேலும் உங்களின் மேலான கருத்துகளை எதிர் நோக்குகிறேன்


     பெயரெச்சம்:

            ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

             (எ.கா)  படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள்

             மேற்கணடவற்றுள் படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

    பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

                படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள  படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

               ஒரு வேளை தந்த,சென்ற என்று மட்டும் கேட்கப்படலாம்

             முதலில் படித்த,வந்த,சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள 'அ' என்னும் சத்தத்தோடு முடியும்..

    விளக்கம்:

    படித்த- இதன் கடைசி எழுத்து 'த'

    'த' என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..

    இப்படி வார்த்தையின் இறுதியில் 'அ' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

    பெயரெச்சத்தின் வகைகள்:

    அ.தெரிநிலைப் பெயரெச்சம் ஆ.குறிப்புப் பெயரெச்சம்
    இ.எதிர்மறைப் பெயரெச்சம் ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    என வகைப்படும்.

    அ.தெரிநிலைப் பெயரெச்சம்

          காலத்தை வெளிப்படையாகக் காட்டி சொல் முடியாமல் நின்று
    பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப் பெயரெச்சமாகும். இது மூன்று காலங்களிலும் வரும்.

    (எ.கா) படித்த மாணவன்
                 படிக்கின்ற மாணவன்
                 படிக்கும் மாணவன்

    ஆ.குறிப்புப் பெயரெச்சம்

              காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்பு பெயரரெச்சம் எனப்படுகிறது.

    (எ.கா.) நல்ல பையன்
                  அழகிய மயில்

    இ.எதிர்மறைப் பெயரெச்சம்

    (எ.கா.) பாடாத பைங்கிளி
                  கேட்காத செவி
                  பேசாத பெண்

    ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

     ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப்பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப்
    பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும்.

    (எ.கா.) பாடா பைங்கிளி
                  பொய்யா மொழி
                  வாடா மலர்
                  பேசா வாய்
                  சிந்தா மணி
                   மாறா அன்பு
                  செல்லா காசு
                  தேரா மன்னா


    வினையெச்சம்:

               முடிவு பெறாத வினைச்சொல்லே வினையெச்சம் ஆகும்.

     (எ.கா)  படித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான்.


                    மேற்கணடவற்றுள் படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

    வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

                படித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள  படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவை வினையெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

               ஒரு வேளை தந்து,சென்று என்று மட்டும் கேட்கப்படலாம்


             முதலில் படித்து,வந்து,சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்..

    விளக்கம்:


    படித்து- இதன் கடைசி எழுத்து 'து'


    'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்..

     பாடி,ஆடி,ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.

    விளக்கம்:

    பாடி-இதன் கடைசி எழுத்து 'டி'

     'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.

       
     இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ'  என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

      (அ) தெரிநிலை வினையெச்சம்
      (ஆ) குறிப்பு வினையெச்சம்

    என வினையெச்சம் வகைப்படும்.

    அ.தெரிநிலை வினையெச்சம்
    தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி
    வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.

    (எ.கா) வந்து போனான்
                 நின்று வந்தான்

    ஆ.குறிப்பு வினையெச்சம்

    (எ.கா) அருள் இன்றி செய்தனர்
                அறம் அல்லாது இல்லை.

     3. முற்றெச்சம்

             ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல்.
    வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர். இச்சொல் தனித்து நோக்கும்போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.
    (எ.கா)
         சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
         படித்தனர் தேர்ந்தனர்
         எழுதினன் முடித்தனன

    இலக்கணக் குறிப்பறிதல் - பண்புத்தொகை

    பண்புத்தொகை:

    சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் "மை" விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும்.

    "தொன்னிறம்" இச்சொல்லைப் பிரிக்கும்போது "தொன்மை+நிறம்" எனப் பிரியும். இதில் நிலைமொழியில் "மை" விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.

    உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
    இன்னுயிர் - இனிமை + உயர் ==> பண்புத்தொகை
    பைங்கூழ் - பசுமை + கூழ் ==> பண்புத்தொகை
    செவ்வேள் - செம்மை + வேள் ==>பண்புத்தொகை

    இவ்வாறு பண்புத் தொகையை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
    மேலும் பண்புத் தொகைக்குரிய சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

    1. செந்தமிழ் - செம்மை + தமிழ் ==>பண்புத்தொகை
    2. நெடுந்தேர் - நெடுமை + தேர் ==> பண்புத்தொகை
    3. மெல்லடி
    4. கருவிழி
    5. செங்கை
    6. சீறடி
    7. வெந்தழல்
    8. பொற்காலம்
    9. நற்செயல்
    10. நவகவிதை
    11. குறுநடை
    12. நற்றூண்
    13. பெருமகள்
    14. பெரும்பெயர்
    15. நெடும்படை
    16. நெடுந்திரை
    17. பேரானந்தம்
    18. பேரொளி
    19. நல்லருள்
    20. நல்லுயிர்
    21. மொய்புலி
    22. வெங்கரி
    23. தண்தார்
    24. நற்றூண்


    ஒரு சொல் தரும் இருபொருள்

    ஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் "பார்" என்ற சொல் "காண்" பார்த்தல் என்ற பொருளில் வரும். அதேபோல "உலகம்" என்ற பொருளிலும் வரும். ஆக "பார்" என்ற சொல் பார்த்தல் அல்லது உலகம் என்ற இரு வேறு பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். இடமறிந்து இவற்றின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறான சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்
    பார்: உலகம், காண்
    இசை: புகழ், பாட்டு, இனிய ஒலி
    நாண்: வெட்கப்படு, கயிறு
    மெய்: உடல், மெய்யெழுத்து
    திரை: அலை, திரைச்சீலை
    மறை: வேதம், மறைத்து வை
    பிடி: பெண்யானை, பிடித்துக்கொள்
    படி: பாடம் படி, படிக்கட்டு
    திங்கள்: சந்திரன், மாதம்
    வலி: வலிமை, நோவு

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு