சங்க இலக்கியங்கள்
- சங்க இலக்கியங்கள் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
- பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகை பாவும் பொருள்நெறி மரபின் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் தொகுக்கப் படுவது மேற்கணக் காகும் - பன்னிரு பாட்டியல். |
- தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
- சங்க இலக்கியங்களை சான்றோர் செய்யுட்கள் எனக் கூறியவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசியர் ஆவார்.
எட்டுத்தொகை நூல்கள்
நூல்கள்:
- எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
- எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம் பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று இத்திறத்த எட்டுத்தொகை |
- எட்டுத்தொகை நூல்கள் = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
- எட்டுத்தொகையில் அகம் பற்றிய நூல்கள் = 5 (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு)
- எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, புறநானூறு)
- எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் = 1 (பரிபாடல்)
- எட்டுத்தொகையில் நானூறு என்னும் எண்ணிக்கையில் குறிக்கப்படும் நூல்கள் = 4 (நற்றிணை நானூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நானூறு)
- எட்டுத்தொகையில் எண்ணிக்கையால் பெயர் பெறாத நூல்கள் = 2 (கலித்தொகை, பரிபாடல்)
- கலிப்பா வகையால் ஆன நூல் = கலித்தொகை
- பரிபாட்டு வகையால் ஆன நூல் = பரிபாடல்
- மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
- முதலும் முடிவும் கிடைக்காமல் இருக்கும் எட்டுத்தொகை நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, பரிபாடல்)
- எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது = புறநானூறு
- எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது = பரிபாடல், கலித்தொகை
- எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் = குறுந்தொகை
நூல் | புலவர் | பாடல் | அடி | பொருள் | தொகுத்தவர் | தொகுபித்தவர் | கடவுள் வாழ்த்து பாடியவர் | தெய்வம் |
நற்றிணை | 175 | 400 | 9-12 | அகம் | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | திருமால் |
குறுந்தொகை | 205 | 400 | 4-8 | அகம் | பூரிக்கோ | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | முருகன் |
ஐங்குறுநூறு | 5 | 500 | 3-6 | அகம் | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
பதிற்றுபத்து | 8 | 100(80) | 8-57 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | ||
பரிபாடல் | 13 | 70(22) | 25-400 | அகம் + புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | ||
கலித்தொகை | 5 | 150 | 11-80 | அகம் | நல்லந்துவனார் | தெரியவில்லை | நல்லந்துவனார் | சிவன் |
அகநானூறு | 145 | 400 | 13-31 | அகம் | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
புறநானூறு | 158 | 400 | 4-40 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:
எட்டுத்தொகை நூல்கள் | வேறு பெயர்கள் |
எட்டுத்தொகை |
|
நற்றிணை |
|
குறுந்தொகை |
|
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து |
|
பரிபாடல் |
|
கலித்தொகை |
|
அகநானூறு |
|
புறநானூறு |
|
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு