Pages

    அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக வைத்த தே‌ர்வு முடிவினை வெளியிடவும், பணியிடம் நிரப்பவும், கூட்டத்தொடரில் விவாதிக்கவும் தேர்வர்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை

    மரியாதைக்குரிய தளபதி அவர்களுக்கு வணக்கம்..!! நங்கள் 31-05-2015 அன்று பள்ளிக்கல்வி துறையால் நடத்தப்பட்ட அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு எழுதிய மாணவர்கள்... தேர்வு எழுதி 1 ஆண்டுக்கும் மேலாகியும் முடிவுகள் வெளிவிடாததால் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தங்களை 01-07-2016 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்...

    நீங்களும் எங்கள் கோரிக்கையை ஏற்று உடனே பணி நியமனம் செய்ய அரசை வலியுறுத்தினீர்கள்.. ஆனால் தேர்வு எழுதி 1 ஆண்டு 3 மாதங்கள் ஆகியும் இந்த அரசு மெத்தனமாகவே உள்ளது.. 07-08-2015 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டும் , இன்னமும் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி எங்கள் வாழ்க்கையில் விளையாடி வருகிறது இந்த அரசு...!!

    நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆகஸ்டு 9 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி எங்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...

    1 comment:

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு