Pages

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 2

    கலம்பகம்

    • பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.
    • கலம் + பகம் = கலம்பகம்
    • கலம் = 12
    • பகம் = 6
    • கலம்பகம் 18 உறுப்புகளைக் கொண்டது.
    • கலம்பகத்தின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
    • முதல் கலம்பக நூல் = நந்திக் கலம்பகம்(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
    • “கன்பாய கலபகத்திற்கு இரட்டையர்கள்” எனக் கூறப்படும்
    • அந்தாதி தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பகம்
    • அகப்பொருளும் புறப்பொருளும் கலந்து பாடப்படும்
    • கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கூறுவார் உ.வே.சா

    கலம்பக நூல்:

    நந்திக் கலம்பகம்(முதல் கலம்பக நூல்)ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்நம்பியாண்டார் நம்பி
    திருவரங்கக் கலம்பகம்பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
    திருவாமாத்தூர்க் கலம்பகம்இரட்டையர்கள்
    தில்லைக் கலம்பகம்இரட்டையர்கள்
    மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம்குமரகுருபரர்
    திருக்காவலூர்க் கலம்பகம்வீரமாமுனிவர்
    புள்ளிருக்குவேளூர் கலம்பகம்படிக்காசுப் புலவர்
    திருசெந்திற் கலம்பகம்சாமிநாததேசிகர்(ஈசான தேசிகர்)
    சேயூர்க் கலம்பகம்அந்தக்கவி வீரராகவர்

    நந்திக் கலம்பகம்:

    • இதன் தலைவன் = மூன்றாம் நந்திவர்மன்
    • இதுவே கலம்பக நூல்களில் முதல் நூல்
    • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    • 144 பாடல்கள் உள்ளன.

    உலா

    • “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம்
    • உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்ள்கிளை
    • உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை
    • உலாவில் முன்னிலைப் பகுதி, பின்னிலைப் பகுதி என இரு பகுதிகள் உண்டு
    • தசாங்கம் உலா இலக்கியத்தில் இடம் பெரும்
    • முதல் உலா நூல் = திருக்கைலாய ஞானஉலா(ஆதி உலா அல்லது தெய்வீக உலா)
    • உலாவின் பாவகை = கலிவெண்பா
    • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்”

    முன்னிலைப் பகுதி:

    • முன்னிலைப் பகுதியில் தலைவனின் சிறப்புக் கூறப்படும்
    • ஏழு வகைப் பருவ ஆண்கள் கூறப்படுவர்
    • பாலன் = 1-7 வயது
    • மீளி = 8-10 வயது
    • மறவோன் = 11-14 வயது
    • திறலோன் = 15 வயது
    • காளை = 16 வயது
    • விடலை = 17-30 வயது
    • முதுமகன் = 30 வயதிற்கு மேல்

    பின்னிலைப் பகுதி:

    • பின்னிலைப் பகுதியில் ஏழு பருவப் பெண்களின் காமம் கூறப்படும்.
    • ஏழு வகைப் பருவ மகளிர்
    • பேதை = 5-7 வயது
    • பெதும்பை = 8-11 வயது
    • மங்கை = 12-13 வயது
    • மடந்தை = 14-19 வயது
    • அரிவை = 20-25 வயது
    • தெரிவை = 26-32 வயது
    • பேரிளம் பெண் = 33-40 வயது

    உலாவின் நூல்கள்:

    திருக்கைலாய ஞான உலாசேரமான் பெருமாள் நாயனார்
    மூவருலாஒட்டக்கூத்தர்
    ஆளுடைய பிள்ளை திரு உலா மாலைநம்பியாண்டார் நம்பி
    ஏகாம்பரநாதர் உலாஇரட்டையர்கள்
    திருவாரூர் உலாஅந்தக்கவி வீரராகவர்
    திருக்கழுகுன்ற உலாஅந்தக்கவி வீரராகவர்
    திருகுற்றாலனாதர் உலாதிரிகூட ராசப்ப கவிராயர்
    தில்லை உலாஒட்டக்கூத்தர்
    சிவந்த்தெழுந்த பல்லவராயன் உலாபடிக்காசுப் புலவர்

    மூவருலா:

    • இந்நூலின் ஆசிரியர் = ஓட்டக்கூத்தர்
    • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் “ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
    • மூவருலா என்பது மூன்று சோழ மன்னர்களை பற்றியது.
    • இதில் விக்ரமசோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராசசோழன் உலா ஆகிய மூன்று உலாக்கள் உள்ளன.

    விக்ரமசோழன் உலா:

    • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
    • அவனின் தயார் மதுராந்தகி.
    • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

    திருக்கைலாய ஞான உலா:

    • இதன் ஆசரியர் சேரமான் பெருமாள் நாயனார்
    • இந்நூலை “தெய்வீக உலா, ஆதி உலா” என்றும் கூறுவர்.
    • உலா நூல்களில் இதுவே முதல் நூல்.

    பள்ளு

    • இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர்
    • இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும்
    • இது மருத நில நூலாக கருதப்படுகிறது
    • பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும்
    • இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி.கே.சி
    • பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர்
    • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும், அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்
    • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கியம் பள்ளு ஆகும்
    சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்து
    தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்
    புலனென மொழிப புலனுணர்ந் தோரே
    • சந்த நயம் மிக்கது இந்நூல் வகை
    • “நெல்லு வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது” என்பது பழமொழி
    • முதல் பள்ளு நூல் = முக்கூடற்பள்ளு

    முக்கூடற்பள்ளு:

    • இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
    • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
    • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
    • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
    • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
    • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
    • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
    • இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
    • “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்

    அந்தாதி

    • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
    • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
    • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
    • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.
    • முதல் அந்தாதி நூல் = காரைக்கால் அம்மையாரின் “அற்புதத் திருவந்தாதி’

    அந்தாதி வகைகள்:

    • பதிற்றுப் பத்தந்தாதி
    • யமாக அந்தாதி
    • திரிபந்தாதி
    • நீரோட்டக யமாக அந்தாதி

    அந்தாதி நூல்கள்:

    அற்புதத் திருவந்தாதி(முதல் நூல்)காரைக்கால் அம்மையார்
    சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதிகம்பர்
    திருவேங்கடத்தந்தாதிபிள்ளை பெருமாள் ஐயங்கார்
    திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி(குட்டித் திருவாசகம் எனப்படும்)அதிவீரராம பாண்டியன்
    வீரை அந்தாதி, கோமதி அந்தாதிகாவடிசிந்து அண்ணாமலையார்

    அற்புதத் திருவந்தாதி:

    • இந்நூலின் ஆசிரியர் = காரைக்கால் அம்மையார்
    • இவரின் இயற்பெயர் = புனிதவதி
    • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்
    • 63 நாயன்மார்களில் கோவிலில் நின்றிருக்க இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் இருக்கும் பெருமை பெற்றவர்.
    • இவரின் பாடல்கள் மட்டும் “மூத்த திருப்பதிகம்” எனப் போற்றப்படும்
    • கட்டளை கலித்துறை, அந்தாதி, மாலை என்னும் சிற்றிலக்கிய வகைகளை தொடங்கி வைத்தவர்.
    • ஒரு பொருளை பல பொருளில் பாடும் பதிக மரபை தொடங்கி வைத்தவர்.

    திருவேங்கடத் தந்தாதி:

    • இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
    • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
    • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
    • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.


    பிள்ளைத்தமிழ்

    • முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
    • பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
    • இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
    • இது இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
    • பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்

    ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

    • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

    பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

    • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.

    பிள்ளைத்தமிழ் நூல்கள்:

    குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்(முதல் நூல்)ஒட்டக்கூத்தர்
    மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
    முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
    திருச்செந்தூர் முருகன்
    பிள்ளைத்தமிழ்(பெரிய தமிழ்)
    பகழிக் கூத்தர்
    காந்தியம்மை பிள்ளைத்தமிழ்அழகிய சொக்கநாதர்
    சேக்கிழார் பிள்ளைத்தமிழ்மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்அந்தக்கவி வீரராகவர்

    முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்:

    • இதன் ஆசிரியர் குமரகுருபரர்
    • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
    • ஊர் – திருவைகுண்டம்
    • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
    • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
    • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
    • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு