Pages

    எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜெ., மிரட்டுகிறார் - பாதுகாப்பு கேட்டு மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கதறல்

    டெல்லி: தமது எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மிரட்டுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா கூறியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பாதுகாப்பு இல்லாததால் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கதறினார். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று கதறிய அவர், எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என சசிகலா புஷ்பா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர் தமக்கு பதவி கொடுத்த ஜெயலலிதாவை மதிப்பதாக தெரிவித்த அவர், அதற்காக அவருக்கு தம்மை அடிப்பதற்கான அதிகாரம் கிடையாது என்றும் மத்திய அரசு தம்மை பாதுகாக்க வேண்டும் என கோரினார்.

    ஜெயலலிதா அறைந்தார்: 

    அப்போது பேசிய அவர் திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து விளக்கமளிக்க நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது, எம்.பி பதவியை ராஜினாமா செய்ய கூறி தம்மை அறைந்ததாக கதறியபடி கூறினார். மாநிலங்களவையில் மேற்கண்டவாறு பேசிய சசிகலா புஷ்பாவிற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    காங்கிரஸ் ஆதரவு: 

    இதனையடுத்து இவ்விகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், சசிகலா புஷ்பா பேச அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். ஒரு எம்.பி-யை அவையில் பேசக்கூடாது என தடுக்க அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை இல்லையென்றார். 

    குரியன் உறுதி: 

    சசிகலா புஷ்பாவின் குற்றச்சாட்டுகளை கேட்ட மாநிலங்களவைத் தலைவர் குரியன், சசிகலாவிற்கு தேவைப்பட்டால் அரசு பாதுகாப்பு வழங்கும் என உறுதியளித்தார். 

    சிவாவிடம் சசிகலா மன்னிப்பு: 

    டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது எம்.பி திருச்சி சிவாவை தாக்கியதற்காக அவரிடம் சசிகலா புஷ்பா வருத்தம் தெரிவித்தார். திமுகவின் முக்கிய பிரமுகர் என்ற முறையில் சிவா மீது தமக்கு மரியாதை இருப்பதாக குறிப்பிட்டார்.

    அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்: 

    ஜெயலலிதா மீது சரமாரி புகார் தெரிவித்த சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு