உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 05 ம் தேதி விசாரணைக்காக வந்தது .. இவ்விசாரணையில், வழக்கில் தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் சர்வீஸ் முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது ..
இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம் ... நிச்சயம் நம் வழக்கு வெற்றிகரமாக முடியும் ..
மேலும் நான் மற்றும் எம் குழுவினர் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வழக்கை விரைந்து முடிக்க அரசும் முடிவெடுத்துள்ளது சட்டமன்ற மானியக்கோரிக்கையில் கூறியதை அனைவரும் அறிவர் .....
இந்நேரத்தில் ஒருசிலரின் சூழ்ச்சியினாலும் , தவறான வழிகாட்டியாகவும், போராடுவது சரியா???????
இப்போராட்டத்தின் மூலம் எதிர்வினை எவ்வாறு இருக்கும் ?????
வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராடுவது சட்டரீதியாக சரியா????
அப்படியே போராடினாலும் ஒரு நாள் பேராட்டம் பயன் தருமா???
இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு, திடிரென போராடுவது வழக்கை திசை திருப்பவா????
திருமதி ஜெயகவிதா பாரதி சரியான போராளியா ??? அல்லது அவரின் அரசியல் சூழ்ச்சி என்ன என்பதை அறிந்து போராடுங்கள்...
வழக்கு முடியும் தருவாயில் குட்டையை குழப்புவது எதற்காக ??
அதே நேரத்தில் இவர்களின் செயலால் வழக்கில் தொய்வு ஏற்பட்டால்.. நிச்சயம் அதற்கு இவர்கள் பதில் சொல்லுவார்களா ??
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் புளியங்குடி. ..
வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் நண்பரே
ReplyDelete