அரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு:
குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, 2015 மே, 22ல் வெளியானது. இதில், முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், மீதமுள்ள, 491 காலி இடங்களுக்கு, வரும், 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும். இதற்கு தகுதியானவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது;
அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு