கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.
ஆடி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி லட்ச தீபதிருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி, குறிப்பிட்ட நாளில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி, குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும். அவசர தேவைகளை கருத்தில் கொண்டு மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் போதிய பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு