தமிழ்ப் பல்கலை. ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

3 மாதங்களில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்

BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்பும், பதவியும் அமைச்சர் செங்கோட்டையனின் புதிய சர்ச்சை
அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்...வீடியோ
குரூப் 4 தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவியாளர் ஏற்பாடு செய்வதில் தாமதம்

சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு வேறு ஒருவருக்குள்ள விடைத்தாளை வழங்கியது தெரியவந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் திருப்பூரைச் சேர்ந்த சுபிதா என்கிற பார்வையற்ற மாற்றுத் திறனாளி தேர்வு எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் அரை நேரம் வழங்காமல் ஒன்றே முக்கால் மணிக்கே விடைத்தாளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் மேலே சுபிதாவுக்கு அவருக்குரிய விடைத்தாளை வழங்காமல், தேர்வெழுத வராமல் இருந்த சவீதா என்பவரின் விடைத்தாளைக் கொடுத்துள்ளனர். இதனால் ஓராண்டாக முயன்று படித்தது வீணாகிவிடுமோ என அந்த பெண் கவலை தெரிவித்துள்ளார்.
72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு நீட் பயிற்சி- செங்கோட்டையன் பேச்சு

தமிழகத்தில் 72 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
TNPSC : GROUP 4 TENTATIVE ANSWER KEY

TNPSC : குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்காக தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 169 மையங்களில் 66 ஆயிரத்து 357 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
இந்த தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்திலிருந்து அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வட்டாட்சியர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன
BREAKING NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு
”பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து".
முறைகேடு புகாரை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.
மறுதேர்வு தேதி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.
TNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு
தலைமையாசிரியர் மாணவனால் தாக்கப்பட்டதை கண்டித்து - நாளை 8.2.18 ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு!
நேற்று 06.02.2018 வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைப்பெற்ற அவசர கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாணவனால்தாக்கப்பட்டத்தற்கு இக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்கி உரிய அரசாணை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
3.தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும்.
4.வரும் வியாழக்கிழமை 08.02.2018 அன்று இதனை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
5. இத்தீர்மானங்களை வலியுறுத்தி அன்று மாலை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் வழியாக அரசுக்கு முறையிடுதல்.
வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பிற்காக .
Thanks to Mr. G.D. Babu, மாவட்ட செயலாளர், TAMS, Vellore.










