Pages

    குரூப் 4 தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவியாளர் ஏற்பாடு செய்வதில் தாமதம்

    சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு வேறு ஒருவருக்குள்ள விடைத்தாளை வழங்கியது தெரியவந்துள்ளது.

    சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் திருப்பூரைச் சேர்ந்த சுபிதா என்கிற பார்வையற்ற மாற்றுத் திறனாளி தேர்வு எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் அரை நேரம் வழங்காமல் ஒன்றே முக்கால் மணிக்கே விடைத்தாளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கெல்லாம் மேலே சுபிதாவுக்கு அவருக்குரிய விடைத்தாளை வழங்காமல், தேர்வெழுத வராமல் இருந்த சவீதா என்பவரின் விடைத்தாளைக் கொடுத்துள்ளனர். இதனால் ஓராண்டாக முயன்று படித்தது வீணாகிவிடுமோ என அந்த பெண் கவலை தெரிவித்துள்ளார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு