அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்...வீடியோ
கோபி: அதிமுகவினர் யாரை கைகாட்டுகின்றனரோ அவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கோபி அருகே உள்ள கவுதம்பாடியில் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதிர்காலத்தில் அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலை வழங்கப்படும்.
இதற்கான உத்தரவாதம் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்றார். இதனால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர்.
இதுமட்டும் அல்லாமல், சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சமபந்தி போஜன நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்று பைபிளில் கூறியதாக கூறி ஆச்சரியத்தினார்.
கடந்த வாரம் மதுரையில் அதிமுகவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக உறுப்பினர் அட்டை என்பது உயிர் போன்றது. அந்த அட்டை இருந்தால் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி பொதுமக்களின் விழிபிதுங்க வைத்தார்.
இந்த கருத்து வைரலாகி சமூக வலைதளங்களில் கிழிக்க ஆரம்பித்தவுடன் தான் அதுபோல் கூறவில்லை என்றும் தனது கருத்தை திரித்து கூறிவிட்டனர் என்றும் ஊடகங்கள் மீது பழி போட்டார் செல்லூர் ராஜூ. அதைத் தொடர்ந்து ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கிறோமே அது அதிமுகவினர் என்பதை பார்த்துதானா கொடுக்கிறோம். கட்சி பாரபட்சமின்றிதானே கொடுக்கிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Courtesy. .
One India Tamil
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு