Pages

    தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

    அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.
    ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.


    மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன.

    உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு