மதுரை: மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 2018, பொதுத் தேர்வுகள் தொடர்பாக, அனைத்து சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டம், மதுரையில், பிப்.,9ல் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்குவதற்கு, ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், 'பிப்., 9ல் சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்' என, கல்வி இயக்குனர், இளங்கோவனும் அறிவித்தார். ஒரே நாளில், இரண்டு இயக்குனர்களும் கூட்டம் நடத்த முடிவு செய்ததால், மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சர், செயலர் பங்கேற்க முடிவு செய்துள்ளதால், கடைசி நேரத்தில், சென்னையில் நடத்த கல்வித்துறை முடிவு செய்தது' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு