Pages

    கொடூரம்: திருப்பத்தூர்: தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவர் தப்பியோட்டம்.

    வேலூர்: அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியான திருப்பத்தூரில் திங்கட்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர். பாபு (52), வழக்கம்போல பள்ளியை பார்வையிட்டுக்கொண்டு வந்த போது, இன்று மதியம் 1 மணியளவில், அப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் அவரை கத்தியால் இரண்டு முறை குத்தியுள்ளார்.

    இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், வழக்கம்போல பள்ளியை பார்வையிட்டு வந்த போது, இரண்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வகுப்பறைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் பாபுவை, ஒரு மாணவன் கத்தியால் தாக்கியதில், அவரது காது மற்றும் வயிற்றில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன.

    வலியால் துடித்த பாபுவை அப்படியே விட்டுவிட்டு மாணவர்கள் அங்கிருந்த தப்பியோடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பாபு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    அவர்கள் பிடிபட்டால்தான், இந்த தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்பது தெரிய வரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்பும், மாணவர் ஒருவர், வேதியியல் தேர்வின் போது காப்பி அடித்து சிக்கியதால், அந்த ஆத்திரத்தில் பாபுவை கத்தியால் தாக்க முயன்று பிடிபட்டார். இந்த சம்பவத்தின் போது பாபு சிறிய காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு