Pages

    சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

           ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

    அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.

               மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.

    பள்ளி வேலைகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தினால், தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    "பள்ளி வேலைகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தினால், தலைமை
    ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. சில பள்ளிகளில் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை மாணவ - மாணவியரை பெருக்கச் செய்வது, கழிப்பிடங்களை சுத்தப்படுத்துவது, ஆசிரியர்களுக்கு டீ, காபி போன்றவற்றை வாங்கி வர, கடைகளுக்கு அனுப்புவது போன்ற செயல்களில், ஆசிரியர்கள் ஈடுபடுத்துகின்றனர். 

    கல்வித்துறை தூக்கம்: மாணவர்கள் தவிப்பு.

            திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்தஇரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. இந்த ஆண்டு, தேர்வு முடிவுகளையும் முறையாக வெளியிடாததால், மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்.

          அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாகமாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்வுக்கான 'வினாத்தாள் கட்டணம்' என்ற வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர். 

    பள்ளிக்கல்வி--தமிழ்நாடு அமைச்சுப்பணி உதவியாளர் காலிப்பணியிட விவரம் கோரி இணை இயக்குநர் கடிதம்...


    பி.எட். கலந்தாய்வு செப்.28-ல் தொடங்குகிறது: 16-ம் தேதி முதல் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்

         



    தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

    பள்ளிகளில் தொழிற்கல்வி கேள்விக்குறி:ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

         தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,௦௦௦ தொழிற்கல்வி ஆசிரியர்கள்உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள், நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டது.

    பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., 14ம் தேதி 2ம் கட்ட கவுன்சிலிங்

      சென்னை:பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 14ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த, ஒன்பது வகையான பட்டப் படிப்புகள் உள்ளன.

    எஸ்.சி.,--எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகை தாமதத்தால் பாதிப்பு

            வத்தலக்குண்டு:பி.எட்., கல்லுாரிகளில் படிக்கும் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் அரசு தாமதிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்..தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்.சி.டி.இ.) கண்டிப்பு காட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசு பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகள் என அறிவித்தது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 'போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசின் நிதிஉதவியுடன், மாநில அரசால் வழங்கப்படுகிறது. 

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1,2,4 தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

          தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1,2,4, பி.எஸ்.ஆர்.பி மற்றும் வி.ஏ.ஓ. பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.


    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1-க்கான தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்விற்கு அனைத்துப் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.