"பள்ளி வேலைகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தினால், தலைமை
ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. சில பள்ளிகளில் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை மாணவ - மாணவியரை பெருக்கச் செய்வது, கழிப்பிடங்களை சுத்தப்படுத்துவது, ஆசிரியர்களுக்கு டீ, காபி போன்றவற்றை வாங்கி வர, கடைகளுக்கு அனுப்புவது போன்ற செயல்களில், ஆசிரியர்கள் ஈடுபடுத்துகின்றனர்.
இது, பெற்றோர் இடையே, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்த தொடர் புகார்களை அடுத்து, பள்ளிகளில் மாணவர்களை வேலையில் ஈடுபடுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மாணவ - மாணவியரை, பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது; பள்ளி பணியாளர்கள் மூலமே, வேலைகளை முடிக்க வேண்டும். மாணவ, மாணவியரை, பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால், தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு