அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள் பழுதான நிலையில், அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பலமாவட்டத்தில் பல வட்டார வள மையங்கள் உள்ளன. இங்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி, மீளாய்வுக் கூட்டங்கள் நடத்துவது, சுற்றறிக்கைகள் அனுப்புவது உட்பட கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் நடக்கின்றன.
இம்மையங்களுக்கு ஜெனரேட்டர், நகல் மெஷின்கள், கணினி, எஜூசாட்டிற்கான வீடியோகான்பரன்சிங் உபகரணம் உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் பல மையங்களில் இந்த உபகரணங்கள் பழுது காரணமாக, மாதக் கணக்கில் பராமரிப்பின்றி முடங்கிக் கிடக்கின்றன. இவற்றை பழுது நீக்கினால் நன்றாக பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இருந்தும், அவை குறித்து அக்கறை செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும், மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிகளிலே மையங்கள் அமைக்கப்பட்டன. அப்பள்ளிக்கு வகுப்பறைகள் தேவைப்பட்டதால், அந்த அறைகள் காலி செய்யப்பட்டன. அதன்பின் அங்கிருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான உபகரணங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இத்திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து மையங்களிலும் உபகரணங்கள் கிடப்பில் உள்ளன என கூற முடியாது. சில மையங்களில் இப்பிரச்னை உள்ளன. முழு அளவில் உபகரணங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு