Pages

    TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...


    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.



    2012 ல் நீதிமன்ற தீர்ப்பு படி திரு.கிருஷ்ணன் IAS.அவர்கள் தலைமையில் 3 நபர்களை கொண்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட மறுத்து கிழ்க்கண்ட காரணங்களை கூறியது
    1.தமிழக இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி SSLC+சான்றிதழ் படிப்பு மட்டுமே .மத்திய அரசில் +2 வுடன் டிப்ளமோ ஆகும் .
    2.தமிழ் நாட்டில் பணி நியமனம் ஒன்றிய அளவில் .மத்திய அரசில் தேசிய அளவில்.
    3.ஆங்கிலம் , இந்தி கற்பிக்க தெரியாது ..
    4.கணினி அறிவு இல்லை .என்ற பொய்யான காரணங்களை கூறி மறுத்து விட்டது,உண்மையில் 1989 முதல் நீதிபதி .திரு,ராமானுஜம் அவர்கள் அறிக்கை படி டிப்ளமோகல்வி தகுதிக்கு தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது..


    சென்னை உயர் நீதிமன்றம் 27.2.2014 ல் வழங்கப்பட்ட தீர்ப்புபடி தமிழகத்தின் 2010 ஒரு நபர் குழு அறிக்கை மற்றும் 2012 ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை ஆகியவை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி .நீதிபதி .திரு.பால் வசந்த குமார் அவர்கள் தலைமையிலான இரு நபர்கள் அமர்வு ரத்து செய்து விட்டது மேலும் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட ஓய்வு பெற்ற நீதிபதி.திரு.வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் அமைத்து ஆணை வழங்கப்பட்டது..

    தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) சார்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 தாக்கல் செய்யப்பட்டது.அதில் 10.9.2014 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது .ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014.படி ஊதிய மாற்றம் செய்திட மறுத்து விட்டது .மேலும் அரசு கடிதத்தை ரத்து செய்து ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் 9300+4200 என்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் .1612/2015.தாக்கல் செய்யப்பட்டது .


    இதற்கு தமிழக அரசு ஊதிய பிரச்சணை தீர்க்க முன் வராமல் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்று உள்ளது என்பதால் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) வும் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது .உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் கண்டிப்பாக இழந்த ஊதிய உரிமை மீட்கப்படும் அன்று இடைநிலை ஆசிரியர்ஊதியம் 1.1.2006 முதல் 9300 + 4200 என மாற்றம் செய்யப்படும்.


    News By: TATA Kipson.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு