தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1,2,4, பி.எஸ்.ஆர்.பி மற்றும் வி.ஏ.ஓ. பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1-க்கான தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்விற்கு அனைத்துப் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணியும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது. எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு