Pages

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க ஜாக்டோ கூட்டத்தில் முடிவு

    அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என ஜாக்டோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கூட்டமைப்பு (ஜாக்டோ) கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


    மாவட்டத் தொடர்பாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில ஜாக்டோ பொதுக்குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், துணைத் தலைவர் சென்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    கூட்டத்தில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



    அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வது, ஒன்றிய அளவில் வருகிற 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் கூட்டங்கள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு