🌷நீங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும், அதில் வெல்ல வேண்டும் என்று நினைத்தீர்களானால் அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் உங்களுக்குப் புதியனவல்ல. புரியாததுமல்ல. அவை:
1. ஆர்வம்
2. முயற்சி
3. உழைப்பு
🌷இந்த மூன்றும் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்று கிராமத்தில் ஒரு தேநீர்க்கடையில் அமர்ந்து கொண்டு நாளிதழைப் பார்த்துவிட்டு, ""நம்ம ஊரு பொண்ணு கமலாதேவி ஐ.ஏ.எஸ் ஆயிடுச்சுப்பா'' என்று கண்களை விரித்துச் சிரிக்கும் நிஜத்தின் வியப்புகளை நீங்கள் பார்க்க முடிகிறது.
🌷 காரணம் கிராமப்புறங்களில் இருந்து பெண்களும் சளைக்காமல் முயற்சி செய்து சமீப காலங்களில் அகில இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்து அதிர வைக்கிறார்கள்.
🌷தமிழ் வழியில் படித்தோரும், அரசுப் பள்ளிகளில் படித்தோரும், அஞ்சல் வழியில் படித்தோரும், கிராமப்புறத்தில் இருந்து வந்தோரும் ஆர்வத்தோடு விடாமுயற்சியோடு உழைத்தால் நிச்சயம் "நாளை நான் ஐ.ஏ.எஸ்' என்ற வார்த்தை உங்கள் வாழ்விலும் உண்மையாகும்.
🌷ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித் தாழாது உஞற்று பவர்
🌷ஓர் இலக்கினை அடைந்திட விரும்புகின்றவர் அதற்காகச் செயல்பட விழைகின்றார். அத்தகையோர் சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல் முயல வேண்டும். இவ்வாறு முயற்சி செய்வோரின் செயலுக்கும், இலக்கிற்கும் இடையூறாக ஊழ்வினையே வந்தாலும் முயற்சியுடையோர் அந்த ஊழ்வினையைத் தோல்வியுறச் செய்துவிடுவர் என்கிறார் வள்ளுவர்.
🌷எனவே, ஆர்வத்தை, முயற்சியை, உழைப்பை ஆபரணமாக எண்ணத்தில் அணிந்து கொள்ளுங்கள். எண்ணிய இலக்கினை எளிதாக அடையலாம்.
🌷குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றது. இதற்கு முன்பு ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாத உயரத்தில் குடிமைப் பணித் தேர்வுகள் இருந்தன. தற்போது கடந்த கால நிலைமாறி எல்லாரும் சாதனை படைக்கும் ஏற்றதொரு சூழல் இப்போது நிலவுகின்றது. வாய்ப்புகள் உங்களை வரவேற்கின்றன. வழிகாட்டுதல் இதோ உங்களின் கைகளில்.
🌷 "நாளை நான் ஐ.ஏ.எஸ்' என்பது இனி உங்கள் மனதின் மந்திரம்.
🌷 இம்மந்திரத்தை உள்ளமெங்கும் உற்சாகத்தினைப் பெருக்கி உரக்கச் சொல்லுங்கள்.
🌷குடிமைப்பணிகள் தேர்வுக்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி இங்கு காணலாம்.
🌷கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் தேர்ச்சியே போதுமானது. அதில் சிறப்புநிலை, முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற பாகுபாடு இல்லை. அவற்றில் எதற்கும் முன்னுரிமையும் இல்லை.
🌷பள்ளிக்குச் செல்லாமல் அல்லது இடைநிறுத்தம் ஆகி நேரடியாகப் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் - பின் நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் - பின்னர் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அஞ்சல் அல்லது தொலை வழியிலோ அல்லது தொடர் வழியிலோ பட்டம் பெற்றிருந்தாலும் தகுதியுடையவர்களே.
🌷 பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) மூன்றாண்டு பட்டயப் படிப்பிற்குப் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல், நேரடியாகப் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி பெறுவர்.
🌷முதுநிலைப் பட்டங்கள், ஆய்வுப் பட்டங்கள், முனைவர் பட்டங்கள், எம்.பி.பி.எஸ், போன்ற தொழில்சார் படிப்புகள் போன்றவற்றிற்குச் சிறப்புத் தகுதிகளோ, மதிப்பெண்களோ, கூடுதல் முக்கியத்துவமோ கொடுக்கப்படுவதில்லை.
🌷பட்டப் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. பட்டப் படிப்பு எனப்படுவது ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதியில் ஒன்றுதான். தேர்வு செய்வதற்கான தகுதிகளில் இடம் பெறுவதில்லை. அதே வேளையில் பட்டப் படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களே.
🌷இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆணையத்திற்கு அனுப்பும்போது அல்லது அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் பட்டப்படிப்பினை நிறைவு செய்திருக்க வேண்டும்.
🌷 எடுத்துக்காட்டாக 2016 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 01.08.2016 இல் பட்டப்படிப்பினை நிறைவு செய்திருக்க வேண்டும்.
🌷வயது வரம்பு:
2016 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வு எழுதும் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 01.08.2016 இல் 21 வயதினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதே வேளையில் பொதுப்பிரிவு மாணவர்கள் அதே தேதியில உச்ச வயது வரம்பான 32 வயதினையும், இதர பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் 35 வயதினையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்கள் 37 வயதினையும் பூர்த்தி செய்திருக்கக் கூடாது.
🌷எத்தனை முறை எழுதலாம்?
முதல்நிலைத் தேர்வின் வாய்ப்புகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் பொதுப்பிரிவு மாணவர்கள் 6 முறையும், இதர பிற்பட்ட வகுப்பினர் 9 முறையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சுமார் 16 முறையும் முதல்நிலைத் தேர்வினை எழுதிட முடியும். முதல்நிலைத் தேர்வின் மதிப்பெண்கள் முதன்மைத் தேர்வுக்கான தகுதி பெறும் மதிப்பெண்ணாக மட்டுமே கணக்கிடப்படும். இறுதிநிலைத் தேர்ச்சிக்கு அம்மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டா.
🌷மேலும் ஒரு மாணவர் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து அவ்விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டும் அளிக்கப்பட்டு அவரால் முதல்நிலைத் தேர்வு எழுத முடியாமற் போனாலோ அல்லது சரியாகத் தயாராகவில்லை என்ற எண்ணத்தில் தேர்வு எழுதாமல் விட்டு விட்டாலோ அல்லது தேர்வுக்குச் செல்ல விருப்பமின்றி இருந்துவிட்டாலோ அந்த முதல்நிலைத் தேர்வு அவருக்கான வாய்ப்புகளில் கணக்கிடப்படமாட்டாது. வாய்ப்புகளைப் பாதிக்கவும் செய்யாது. முதல்நிலைத் தேர்வுக்குச் சென்று வருகையைப் பதிவு செய்தால் மட்டுமே வாய்ப்பு கணக்கில் கொள்ளப்படும்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு