Pages

    தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு
    தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கின்றனர்


    ஆங்கில வழி கல்வியால் மெட்ரிக்., பள்ளிக்கு சென்ற பல மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வந்தனர். ஆகஸ்ட் 17, 24,31 மற்றும் செப்டம்பர் 7ல் ஆசிரியருக்கு பயிற்சி அளித்தனர். அதை தொடர்ந்து கணிதம், அறிவியல் உபகரண பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு செல்வதால், ஆசிரியர் இன்றி பள்ளிகள் இயங்குகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: செப்டம்பருக்குள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் நிதி திரும்ப சென்றுவிடும். இதனால் தொடர் பயிற்சியை 6 நாள் மட்டுமே தருகிறோம். இரு ஆசிரியர் பள்ளிகளை பொறுத்த மட்டில் இருவரும் பங்கேற்க வேண்டும். மாதம் முழுவதும் ஒரு ஆசிரியருடன் பள்ளி இயங்குவதால், மாணவர்கள் எந்த ஆசிரியர் கற்றுத்தரும் பாடத்தை கற்பது என தெரியாமல் தவிக்கின்றனர். வரும் 19 முதல் 25 வரை முதல் பருவ தேர்வு நடக்க உள்ளது. இந்நேரத்திலும் பயிற்சி வழங்குகின்றனர்,'' என்றார்.


    1 comment:

    1. admin அவர்களின் மௌனத்திற்கு காரணம்

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு