கர்நாடகாவில் பான்ட்வாலா என்ற பகுதியில் வேத பாடசாலையில் வீட்டுப்பாடம் எழுதி வராததால் மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வீடியோவாக வேகமாக பரவியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே உள்ள வேத பாடம் கற்றுத்தரும் பள்ளியின் ஆசிரியர் சோமசுந்தர சாஸ்திரி என்பவர், வலதுகையில் கட்டுடன் வந்த மாணவனை அடித்து துன்புறுத்தினார்.
இது தொடர்பான அந்த வீடியோவில், மாணவன் தனது வலது கையில் ஏற்கனவே காயம் காரணமாக கட்டு போட்டுள்ளான். அதனையும் பொருட்படுத்தாமல் அந்த மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்தி காதை திருகி, அவனது இடதுகையை முறித்து அவனை துன்புறுத்துகிறார்.
வலி தாங்காமல் அந்த மாணவன் அலறுகிறான். அந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆசிரியரின் இந்த கொடூர செயலை குழந்தைகள் உரிமை அமைப்பினர் போலீசிலும் புகார் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு